முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை சட்டவிரோதமானது எனக்கூறி ஜனநாயக தேசிய கூட்டணி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக கூட்டணியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சரத் பொன்சேகா மீதான இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நேற்று இடம்பெற்றன. யுத்தகாலத்தில் ஆயுதக் கொள்வனவு ஊழல்களில் ஈடுபட்டதாகக் கூறி மூன்று ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
எனினும் மகிந்தவின் அனுமதியின் பின்னரே இத்தீர்ப்பு அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இராணுவ நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக ஜனநாயக தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to முன்னாள் இராணுவத் தளபதி பொன்சேகாவின் சிறைத்தண்டனை சட்டவிரோதம்