Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் கடந்த ஆண்டு போர் முடிவதற்கு முன்னரே இலங்கை இராணுவத்திடம் சென்று சரணடைந்துவிட்டார். பின்னர் அரசுக்குச் சார்பாக தற்போது இயங்கி வரும் அவர், யாழ்ப்பாணத்தில் அரசு சார்பு தொலைக்காட்சி ஒன்றில் பொறுப்பாளராக உள்ளார். இவர் பி.பி.சி க்கு அளித்துள்ள பேட்டியொன்றில், ஈழப் போர் என்பது வீணானது என்றும், மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் வீணடிக்க நடத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் கைதாகி செப்ரம்பர் மாதத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் எங்கு வசிக்கிறார் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் கூட, தாம் தமது மனைவியுடன் யாழ்ப்பாணத்தில் மிக நிம்மதியாக வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இவரின் மனைவி யாழ்ப்பாணத்தில் ஆசிரியையாகக் கடமையாற்றுகிறார்.

மேற்படி பேட்டியில், "நீங்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்ததற்காக வருந்துகிறீர்களா என்று கேட்டதற்கும், அடுத்த மாதம் நடக்கவுள்ள இவருக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்துக் கேட்டதற்கும் கருத்துக் கூற மறுத்துள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to ஈழப் போர் வீணானது என்கிறார் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com