அவுஸ்திரேலிய தேசத்தில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டு 15 ஆண்டுகளாக செய்மதி ஊடாக அவுஸ்திரேலியா, நியுசிலாந்து முழுவதும் தனது சேவையை ஒலிபரப்பி வரும் 24 மணிநேர இன்பத்தமிழ் ஒலி வானொலியின் 2வது கலைக்கூடம், சிட்னியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செப்டெம்பர் மாதம் 12ம் திகதி உத்தியோகபபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு 11.58 மணியளவில் தாயக விடுதலை போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்கும், புலத்திலும், களத்திலும் வாழ்ந்து மறைந்த மாமனிதர்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களுக்கும் நினைவுகூர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.
இக்கலைக்கூடம் தாயகத்திலும், அவுஸ்திரேலியாவிலும் வாழும் தமிழ் மக்களுக்காக தன்னலமற்ற தனித்துவமான சேவை புரிந்து மறைந்த ”மாமனிதர்” தில்லை ஜெயக்குமார் நினைவாக ”மாமனிதர் தில்லை ஜெயக்குமார் ஞாபகார்த்த ஒலிக்கூடம்”, மாமனிதருடைய பாரியார் திருமதி யோகா ஜெயக்குமார் அவர்களினால் மதியம் 12 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிட்னி, மெல்பேர்ண் செயற்பாட்டாளர்கள், வர்த்தக பிரமுகர்களினால் மங்கள விளக்கேற்றப்பட்டது.
கலைக்கூடத்தின் முதல் இறுவட்டு திருமதி யோகா அவர்களினால் ஒலிபரப்பப்பட்டு, இன்பத்தமிழ் ஒலி வானொலியின் இயக்குனர் திரு பாலசிங்கம் பிரபாகரனால் முதலாவது ஒலிபரப்பு அறிவித்தலும் செய்யப்பட்டது.
இந்நிகழ்வுக்கு சிட்னி மெல்பேர்ணிலிருந்து தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், செயற்பாட்டளர்களும், இன்பத்தமிழ் வானொலியின் அறிவிப்பாளர்களும், பல அபிமான நேயர்களும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர்.
வருகை தந்திருந்த அனைவருக்கும் நிலையக் கலையகம் சுற்றிக் காணபிக்கப்பட்டு இன்பத்தமிழ் ஒலி நிர்வாகத்தினராலும், அறிவிப்பாளர்களினாலும் பல்சுவையான உணவுகளும், சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டது. இக்கலைக்கூடமும், அபிமான நேயர்களின் நிதிப்பங்களிப்புடனும், தன்னலமற்ற தொண்டர்களின் கூட்டு முயற்சியினாலும் உருவாக்கம் பெற்றுள்ளது.
அவுஸ்திரேலிய ”இன்பத்தமிழ் ஒலி” வானெலி ஆரம்பித்த நாள் முதல் தமிழுக்கும், தமிழ் தேசியத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் பல இக்கட்டான சுழ்நிலைகளில் தொடர்ந்தும் ஆற்றி வருகின்ற அளப்பரிய பணி காரணமாக பல்லாயிரக்கணக்கான நேயர்களினால் விரும்பிக் கேட்கும் வானொலியாக திகழுவதோடு, புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய மண்ணில் வதியும் பல மூத்த பிரஜைகளிற்கு, பெரும் ஆறுதலாகவும், துணையாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to சிட்னியில் இன்பத்தமிழ் ஒலி வானொலியின் 2வது கலைக்கூடம் திறப்புவிழா (படங்கள் இணைப்பு)