Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இது முழுமையாக ஜனநாயக மீறல் சம்பவம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வுபொதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையும் அடங்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என தெரிவித்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ் இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் எனக்கூறினார்.

எனினும் தாம் அதனை நீக்கும் யோசனையை தீர்வுபொதியில் இடம்பெறச் செய்ததாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் பதவியினை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டபோது தாம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவள் அல்ல என சந்திரிகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டு வருட ஆட்சி தொடர்பாக சந்திரிகாவிடம் கேட்டபோது அது தொடர்பாக தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் பதிலளித்தால் தமக்கு வெள்ளைவாகனம் அனுப்பப்பட்டு விடும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எமது தளங்கள்:

ஈழத்து காணொளிகள்

ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to பதில் அளித்தால் எனக்கு வெள்ளை வாகனம்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com