இலங்கையில் விடுதலைப் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும் சர்வதேச ரீதியில் அவர்களின் வலைப்பின்னல் செயற்பட்டு வருவதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு “சன் சீ' கப்பல் நல்ல தொரு உதாரணமாகும் என்று பிரதமர் தி.மு.ஜயரட்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
கனடாவிற்கு அண்மையில் 490 பேர் அகதிகளாக சென்றனர் இவர்களில் சிலரை அந்நாட்டு பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை இலங்கையில் முற்றாக ஒழித்துவிட்டோம். ஆனால் சர்வதேச ரீதியில் அவர்களின் வலைப்பின்னல் செயற்பட்டு வருகின்றதென்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இதற்கு சன் சீ கப்பல் நல்லதொரு உதாரணமாகும். சர்வதேச ரீதியில் புலிகள் பலமடைய முயற்சிக்கின்றனர்.
எனவே நாட்டின் சுதந்திரத்தையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அவசரகாலச்சட்டம் அவசியமாகும். அதற்கு சகலரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்

0 Responses to இலங்கையில் புலிகளை ஒழித்துவிட்டோம் ஆனால் சர்வதேச ரீதியாக புலிகள் செயற்படுகிறார்கள்