Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் நாள் 27.11.2010 லண்டன் எக்ஸெல் மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இந் நிகழ்வுகளில் பெரும் தொகையான மக்கள் கலந்துகொண்டதோடு, மண்டபமும் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. மாலை 6.00 மணிவரை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை முதல் மாலை 5.00 மணிவரையிலான நேரத்தில் சுமார் 40,000 ஆயிரம் பொதுமக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு அகல் விளக்கு ஏற்றி தமது அஞ்சலியைச் செலுத்தினர். மாலை 6.00 மணி வரை மக்கள் கூட்டம் அலையெனத் திரண்டு வந்துகொண்டு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

மாவீரர் தினத்தைக் குழப்பும் நோக்கில் சில விஷமிகள் திட்டமிட்ட பல பரப்புரைகளை மேற்கொண்டிருந்தனர். மாவீரர் தினவிழாவில் நுளைவுக் கட்டணங்கள் அறவிடப்படுவதாகவும், மக்கள் கோயில்களுக்கே செல்லவேண்டும் எனவும் பல குறுந்தகவல்கள் வெளியாகியிருந்தது. இருப்பினும் இதனைப் பொருட்படுத்தாது மக்கள் மாவீரர் தின நிகழ்வுக்கு எழுச்சியோடும், உணர்ச்சிபூர்வமாகவும் கலந்துகொண்டு இந் நிகழ்வுகளை அனுஷ்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அகவணக்கத்தில் ஈடுபட்டிருந்தமை தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் ஒரு செயலாக அமைந்திருந்தது.





0 Responses to லண்டன் தேசிய நினைவெழுச்சி நாளில் 40,000 மக்கள் பங்கேற்பு (காணொளி, படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com