அதனைத்தொடர்ந்து தமிழீழ விடுதலைப்போராட்டதிலே சாதனை வீரர்கள் காவிய நாயகர்கள் நடாத்திய வீரகாவியமான எல்லாளன் படை நடவடிக்கை திரையிடப்பட்டது. பெற்றோர்கள், உடன் சகோதர சகோதரியர்கள் மதிய உணவுடன் மாவீரர்நாள் நினைவுக்கலைத்திறன் போட்டியில் பங்கு கொண்டு வெற்றியீட்டி குழந்தைகளின் பாடல், பேச்சு, தனிநடிப்பு போன்றவை இடம் பெற்றன. அதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
பெற்றோர்களை பொறுப்பாளர் மதிப்பளிக்க, பெற்றோர்கள் ஏனைய மாவீரர் உறவுகளை மதிப்பளித்து நினைவு பொருட்கள் வழங்கப்பட்டன. மாவீரர்கள் என்ற உயரிய உன்னதமானவர்கள் பற்றியும், தற்போதைய சூழ்நிலை பற்றியும் திரு. சத்தியதாசன் அவர்கள் உரையாற்றினார்.
தமிழீழ மக்களின் தாரகமந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உச்சரிப்போடு நிகழ்வு நிறைவு பெற்றது.
தாயகத்தின் விடுதலைக்காக தம்முயிரை ஈந்த வீரர்கள், பொதுமக்கள் உலகத்தில் எல்லா நாடுகளிலும் மதிப்பளிக்கப்படுகின்றனர். அந்த வகையில் தமிழீழ தேச உதயத்திற்காக தம் இன்னுயிரை ஈந்தவர்கள் எமது மாவீரர்கள். மாவீரர்களை; எம் இதயக்கோயிலில் வைத்து வழிபடும் அதே வேளை அந்த அற்புத மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் வாழும் காலம் வரை மதிப்பளிக்கப்பட வேண்டியவர்களே.
தாயகத்தில் இன்று தங்கள் குழந்தைகளை மண்ணுக்காக கொடுத்து விட்டு வாய்விட்டு சொல்லியழ முடியாததொரு நிலையில் வாழ்ந்து வருகின்றனர். எந்தவொரு இனமும் தமது விடுதலைக்கு செய்யாத தியாகத்தை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று எமது இனம்தான் செய்து கொண்டு வருகின்றது. யூத இனம் செய்த உயிர் கொடையால் இன்று உலகமே வியக்கும், புருவம் உயர்த்தி பார்க்கும் ஒரு நாடாக விளங்குகின்றது. அந்த இனம் தான் இழந்த உறவுகள், கொடுத்த உயிர்களுக்கு கிடைத்த மதிப்பாக தம்முடைய நாட்டையே பார்க்கின்றனர்.
அதே போலவே எமது நாட்டை நாம் பெற ஒவ்வொரு தமிழ்மகனும் உண்மையாகவும், அர்பணிப்புடனும், நம்பிக்கையோடு தேசவிடுதலை உணர்வுடன் எமது தேசத்தை பெற உழைப்போம் அதுவே நாம் எமது மாவீரர்களுக்கும், பெற்றவர்களுக்கும் செய்யும் உண்மையான மதிப்பளிப்பாகும்.



0 Responses to மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு பிரான்ஸ்