Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

.பி.டி.பி என்ற துணைஇராணுவக் குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் நுளைவு அனுமதியை கொழும்பில் உள்ள பிரித்தானியா தூதரகம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 29 ஆம் நாள் பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொண்ட சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா தன்னுடன், டக்ளஸ் தேவானந்தாவையும் அழைத்துவர முற்பட்டிருந்தார். ஆனால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நுளைவு அனுமதி வழங்கமுடியாது என பிரித்தானியா தூதரகம் தெரிவித்துள்ளதுடன், அவரின் அனுமதியும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா தூதரகத்தின் கறுப்புப் பட்டியலில் தேவானந்தாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மகிந்தாவின் குழுவில் இடம்பெற்ற 40 பேரினதும் நுளைவு அனுமதிகள் பலத்த சர்ச்சைகளின் பின்னர் தான் வழங்கப்பட்டதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

29 ஆம் நாள் புறப்படுவதற்கு 3 மணிநேரத்திற்கு முன்னரே சிலருக்கு அனுமதிகள் கிடைத்ததாகவும், அதனால் பயணம் தாமதமாகியதாகவும் அவை மேலும் தெரிவித்துள்ளன.

0 Responses to துணைஇராணுவக் குழுவின் தலைவர் டக்ளஸ் பிரித்தானியாவிற்குள் நுழைய அனுமதி மறுப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com