Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஒட்டாவா மாவீரர் நாள் நிகழ்வு

பதிந்தவர்: தம்பியன் 04 December 2010

ஒட்டாவா மாணவர் சமூகத்தின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(27.11.2010) மாலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை கனேடிய தலைநகர் ஒட்டவா நகரில் கால்ற்றன் பல்கலைக்கழக மண்டபத்தில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.

ஓட்டாவா தமிழ் சமூகத்தினரும் மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்வு ஒட்டாவா பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஓன்றிய தலைவரால் கனேடிய தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியேற்றும் பாடல் இசைக்க, தமிழீழ தேசியக்கொடியும் ஏற்றப்பட்டது.

மாவீரர் குடும்பத்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தேச‌ விடுதலைக்காக வித்தாகிய மாவீரர்களுக்கு அகவணக்கம் இடம்பெற்றது. பின்னர்அழகிய முறையில் உருவாக்க பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்த மாவீரர் கல்லறைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

அத்துடன் மாவீரர் பாடல்கள், ஆங்கில, தமிழ் கவிதைகள், எழுச்சி நடனம், நாடகம் ஆகிய கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன‌. நிகழ்வின் இறுதியில் புரட்சிகவிஞர் காசியானந்தன் அவர்களின் உரை இடம்பெற்ற காணொளி ஒளிபரப்பபட்டது.

0 Responses to ஒட்டாவா மாவீரர் நாள் நிகழ்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com