Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைய்ல்ன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் லண்டனுக்கு வந்திருந்த போர்க்குற்றவாளி ஒருவர் தப்பிச்சென்று விட்டதாக பிரிட்டிஸ் டெய்லி காடியன் செய்தி வெளியிட்டுள்ளது

சாகி கல்லகே என்ற முன்னாள் 23 மற்;றும் 59 ஆம் படைப்பிரிவுகளின் முன்னாள் கட்டளை தளபதியே இவ்வாறு தப்பிசென்று விட்டதாக அந்த செய்திதாள் குறிப்பிட்டுள்ளது

இந்த போர்க்குற்றவாளிக்கு எதிராக, லண்டன் ஹோஸ்பேரி வீதியில் உள்ள நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று பிடியாணை வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

எனினும் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார்; விசாரணைகளை ஆரம்பிக்கும் முன்னரே, போர்ககுற்றவாளியான கலகே கடந்த வியாழக்கிழமையன்று பிரித்தானியாவில் இருந்து தப்பிச்சென்று விட்டதாக காடியன் குறிப்பிட்டுள்ளது

இவர், 2009 ஆம் ஆண்டு இலங்கைப்படையினர் முல்லைத்தீவை நோக்கி முன்னேறிய போது முல்லைத்தீவின் வைத்தியசாலையின் மீது எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டு பல பொதுமக்கள் பலியாவதற்கு காரணமாக இருந்தார் என வழக்கை தாக்கல் செய்தவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்

இதன் போது, சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு, அமரிக்க ராஜாங்க திணைக்களம், மற்றும் சர்ச்சைகள் தொடர்பான குழு ஆகியவற்றின் இலங்கையின்; போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் இந்த வழக்கின் போது சமர்ப்பிக்கப்பட்டன.

0 Responses to போர்க்குற்றவாளி ஒருவர் தப்பிவிட்டார்: பிரிட்டிஸ் டெஸ்லி காடியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com