முதலில் தமிழீழ மக்களின் விடுதலையொன்றையே தனது மகத்தான லட்சியமாக வரித்து அந்த லட்சியத்துக்காகவே இறுதிவரை வாழ்ந்த தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களின் திருவுருவப்படத்துக்கும் ஆழிப்பேரலையால் அழிக்கப்பட்ட மக்களின் நினைவாக வைக்கப்படிருக்கும் அடையாள படத்துக்கும் பொது ஈகச்சுடரேற்றி வைக்கப்பட்டது.
பொது ஈகச்சுடரை பெர்லின் தமிழ் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் ஏற்றி வைத்தார்.பொது ஈகச்சுடரேற்றலைத் தொடர்ந்து எமது தேசத்தின் விடுதலை வழிகாட்டியாகத் திகழ்ந்த தேசத்தின் குரல் பாலா அண்ணன் அவர்களுக்கும் ஆழிப்பேரலையால் அழிக்கப்பட்ட மக்களின் நினைவாக வைக்கப்படிருக்கும் அடையாளப் படத்துக்கும் அனைவரும் அமைதியாகவும் நிரையாகவும் எழுந்து வந்து சுடரேற்றி மலர்தூவி வணக்கத்தைச் செலுத்தினர்.
தொடர்ந்து தேசத்தின் குரல் பாலா அண்ணா அவர்களுக்காகவும் தமிழீழ விடுதலைப் போரிலே வீரச்சாவடைந்த மாவீரர்களையும் சிறீலங்கா இந்தியப் படைகளாலும் ரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் அத்தோடு நாம் என்றும் காணாத ஆழிப்பேரலையின் இயற்கை அனர்த்தத்தால் பறிகொடுக்கப்பட்ட மக்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
மண்டபம் நிறைந்த இவ் நிகழ்வில் இளையோர்களால் பாடல்கள் கவிதைகள் நடனங்கள் கவியரங்கம் என பல எழுச்சி நிகழ்வுகள் வழங்கப்பட்டது .அத்தோடு உணர்ச்சி கவிஞர் காசிஆனந்தன் அவர்களின் 'முள்ளிவாய்க்கால் முடிவல்ல அது திருப்பம்' எனும் காணொளி மக்களுக்கு காண்பிக்கப்பட்டது .இறுதியாக யேர்மன் சம உரிமைக்கான மையத்தாலும் யேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவையாலும் முன்னெடுக்கப்படும் வேலைதிட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டது. இறுதியாக தமிழ் தேசிய கீதம் பாடப்பட்டு இவ் எழுச்சி நிகழ்வு சிறப்பாக நிறைவு பெற்றது.



0 Responses to ஜேர்மனியில் நடைபெற்ற தேசத்தின் குரல் நினைவு நாளும், ஆழிப்பேரலை நினைவு நாளும் (படங்கள் இணைப்பு)