Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அம்பாறை மாவட்டத்தின் கல்மனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் உள்ள இலங்கை மின்சார சபைக்கு அலுவலகமாக திறக்கப்படவிருந்த கட்டிடத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 8.15மணியளவில் இந்த சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து மீட்க்கப்பட்டதாக கல்முனை பெருங்குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாக் தெரிவித்தார்.

மீட்க்கப்பட்டவர் 54வயதுடைய பாண்டிருப்பை சேர்ந்த செல்லையா பிரேமதாசன் எனவும் இவர் கல்முனை பிராந்திய அலுவலகத்தின் சிரேஸ்ட அத்தியட்சகராகவும் கடமையாற்றிவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைமட்டக்களப்பு பிரதான வீதியில் தாளவட்டுவான் பொலிஸ் சோதனைச்சாவடிக்கு அருகில் முன்னர் கருணாகுழுவின் முகாமாக செயற்பட்ட குறித்த சடலம் மீட்க்கப்பட்ட வீடு கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மின்சார சபைக்கென பெறப்பட்டதாகவும் அதில் விரையில் மின்சாரசபையின் செயற்பாடுகள் ஆரம்பிக்க இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினம் காலை வீட்டில் இருந்து தேனீர் அருந்திவிட்டு தமது அலுவலகத்தை பார்வையிட சென்றதாகவும் அவருக்கு ஏன் இது நடந்தது என்பது தனக்கு புரியாமல் உள்ளதாகவும் உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்தார்.

இதேநேரம் சம்பவ இடத்துக்கு சென்ற பதில் நீதிவான் வகாப்டீன் மரண விசாரணையை நடத்தியதுடன் பிரேத பரிசோதனைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டுசெல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதார்.

தற்போது கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பான விசாணையை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த உயிரிழந்தவர் முன்னர் கருணாகுழுவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதியின் ஆலோசகராக செயற்பட்டதுடன் பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவந்தவரெனவும் அப்பகுதி தகவல்கள் எமக்கு தெரிவித்தன.


0 Responses to அம்பாறை மாவட்டத்தில் தூக்கில் தொங்கிய ஆணொருவரின் சடலம் மீட்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com