Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்தவர்களுக்கெதிராக நடாத்தும் சனநாயகவழிப்போரா ட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய அரசுக்கும், பாதுகாப்புத் துறைக்கு நன்றி தெரிவித்தும், போர்க்குற்றவாளிகளை சர்வதேச மன்றத்தில் நிறுத்த வலியுறுத்தியும் பிரான்சில் எதிர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவுக்கு வருகை தந்த தமிழ்மக்களின் இனப்படுகொலைச் சூத்திரதாரியும், போர்க்குற்றவாளியுமான சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷ அங்கு வாழ் தமிழீழ மக்களின் எழுச்சி மிகு போராட்டத்தினால் நாட்டைவிட்டு வெளியேறிய போதும் அவர்மீது சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கோரியும்!

சிங்கள இராணுவம் தமிழர் மீது நடாத்திய மிகக்கேவலமான கொடூரத்தை வெளிகொணர்ந்த சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கும்!

சிங்கள இனத்தால் புண்பட்டு போயுள்ள தமிழ்மக்கள் தமக்கு தீங்கிழைத்தவர்களுக்கெதிராக நடாத்தும் சனநாயகவழிப்போரா ட்டத்திற்கு ஆதரவளித்த பிரித்தானிய அரசுக்கும், பாதுகாப்புத் துறைக்கு நன்றி தெரிவித்து சீறி லங்கா அரசை குற்றவாளிகளின் அரசாக உலகிற்கு தொடர்ந்து வலியுறுத்த பிரித்தானியாவை தொடர்ந்து

பிரான்சில் நடாத்தும் தொடர் எதிர்ப்புப் போராட்டம்

காலம்: 08:12: 2010 புதன்கிழமை பி. பகல் 14:00 மணிமுதல்

இடம்: Place du Paraquay (சீறிலங்கா தூதரகத்திற்கும் பல நாடுகளின் தூதரகத்திற்கும் அருகாமையில்)

Métro : Porte Dauphine Ligne 2 (Nation-Porte Dauphine)

போர்க்குற்றவாளிகளை இனங்காட்டுவோம்! வாருங்கள்!

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
தொடர்புகளுக்கு: 06 15 88 42 21

0 Responses to ஓங்கி ஒலிக்கும் எம் ஒவ்வொரு குரலும் சீறிலங்கா அரசை குற்றவாளி கூண்டில் நிறுத்தும்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com