ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்வதற்கு பிரித்தானிய நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக திவயின ஞாயிறு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யுத்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதியை கைது செய்வதற்கு அந்நாட்டு ஆரம்ப நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த 2ம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயக ரீதியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவரை வேறு நாட்டில் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
30 ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை இல்லாதொழித்து மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதியின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை தெரிவித்துள்ளது.
மிகவும் திட்டமிட்ட முறையில் இந்த நீதிமன்ற உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. நோர்வே சட்ட நிறுனமொன்றின் உதவியுடன் புலி ஆதரவாளர்கள் இந்த உத்தரவினை பெற்றுக் கொண்டுள்ளனர் என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

0 Responses to போர்க்குற்றவாளி மகிந்தவை கைது செய்வதற்கு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு: திவயின