Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தி.மு.க அரசைத் தூக்கிலிட வேண்டும்: வைகோ

பதிந்தவர்: ஈழப்பிரியா 10 December 2010

சீமானை விடுவித்தது உயர் நீதிமன்றம்!
மனித உரிமைகளைப் பறிக்கும்
கருணாநிதி அரசை தூக்கி எறிவோம்!
வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வரும் கருணாநிதியின் தி.மு. அரசு ஜனநாயகத்தின் மென்னியை முறிக்கவும், அரசியல் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமையான பேச்சுரிமையை நசுக்கவும் குறிப்பாக, ஈழத் தமிழ் இனத்திற்கு ஆதரவுக் குரல் எழுவதை அடியோடு தடுக்கவும் அனைத்து விதமான அக்கிரம நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளது. அதனால்தான் தேசப் பாதுகாப்புச் சட்டத்தை ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசுபவர் மீது தொடர்ந்து ஏவியது. ஏற்கனவே, ஈழதமிழர்ருக்கு ஆதரவாகப் பேசி புதுவை மாநில காங்கிரஸ் அரசால் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இயக்குனர் சீமான் மீது போட்டவழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடுவித்ததையும் கருத்தில் கொள்ளவில்லை.

சிங்களக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குவதைக் கண்டித்துப் பேசியதற்காக இயக்குனர் சீமானை முதலில் சாதாரண சட்டப் பிரிவின் கீழ் தி.மு. அரசு காவல்துறையின்மூலம் கைது செய்தது. அவர் பிணை மனு தாக்கல் செய்யப் போகிறார் என்று அறிந்தவுடன் தேசப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு போட்டு கருணாநிதி அரசு சிறையில் அடைத்தது. இது ஜனநாயகத்தை அழிக்க முயலும் அராஜக நடவடிக்கை என்று உடனடியாகக் கண்டனம் செய்து அறிக்கை தந்தேன்.

ஏற்கனவே மறுமலர்ச்சி தி.மு..வின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது 2009-ஆம் ஆண்டு திருப்பூரில் பொதுக்கூட்டம் பேசியதற்கான சாதாரண சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து கோவை சிறையில் கருணாநிதி அரசு அடைத்தது. பிணை மனுவை நாஞ்சில் சம்பத் தாக்கல் செய்து திருப்பூர் நீதிமன்றம் பிணையில் விடுதலை ஆணையைப் பிறப்பித்த பின்னர், நள்ளிரவில் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகி காவல்துறை தேச பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நாஞ்சில் சம்பத்தை கோவைச் சிறையில் இருந்து வெளிவர விடாமல் அடைத்தது. அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றில் நானே வாதாடினேன். நாஞ்சில் சம்பத்தைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்க் கைது செய்தது தவறு எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

2009 மே 2-ஆம் நாள் சிங்கள அரசு தமிழர்களை அழிக்க ஆயுதங்களை ஏற்றிச் சென்ற இந்திய இராணுவ வாகனங்களை வழிமறித்த மறுமலர்ச்சி தி.மு., மற்றும் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கருணாநிதியின் காவல்துறை கைது செய்து தேசப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கோவைச் சிறையில் அடைத்தது.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அவர்கள் அனுப்பிய புகார் மனுவின்பேரில் இந்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி அவர்களில் சிலரை சிறையிலிருந்து விடுவிக்க வைத்தது. மற்றவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்துச் செய்து உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை தி.மு. அரசு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தது. அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததில் அரசின் நடவடிக்கையை ரத்துச் செய்து உயர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்நிகழ்வுகள் தி.மு. அரசின் கன்னத்தில் விழுந்த அறையாக இருந்தபோதிலும், சூடு, சொரணை, வெட்கம் ஏதுமின்றி மீண்டும் சீமானைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வேலூர் சிறையில் அடைத்தது. நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் சீமானை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி விடுதலை செய்துவிட்டது.

தமிழ்நாட்டில் காவல்துறையை, ஈழத் தமிழ் ஆதரவுக் குரலை நசுக்கவும், ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கவும், தொடர்ந்து ஈடுபட்டு வரும் கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் பதவியில் நீடிப்பதற்கு துளியளவும் அருகதை அற்றவர் என்பதை ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டவர்களும், தமிழ் உணர்வாளர்களும் உணரக் கடமைப்பட்டுள்ளார்கள்.

இன்று உலக மனித உரிமைகள் நாளாகும். ஆனால் தமிழ்நாட்டில் மனித உரிமைகளை அதிகாரக் கொடுங்கரங்களால் பறிக்க வெறியாட்டம் போடும் கருணாநிதி அரசை மக்கள் சக்தியைத் திரட்டி தூக்கி எறிய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சூளுரை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

'தாயகம்' வைகோ
சென்னை-8 பொதுச் செயலாளர்
10.12.2010 மறுமலர்ச்சி தி.மு.

0 Responses to தி.மு.க அரசைத் தூக்கிலிட வேண்டும்: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com