Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதிக்கட்டப் போரில் நடந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்கள் நாளுக்கு நாள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நாட்களில், இப்போர்க் குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைகள் அவசியம் என்ற கோரிக்கைகளும் பலபக்கங்களில் இருந்தும் எழுந்தவண்ணம் உள்ளது. சனல் 4 தொலைக்காட்சி தொடர்ச்சியாக பல காணொளி ஆதாரங்களை வெளியிடுவதோடு, சர்வதேச விசாரணை தேவை என்பதை அது முன் நிலைப்படுத்திவருகிறது. சர்வதேச குற்றவியல் வழக்கறிஞர்களுக்கும் இதை சனல் 4 தொலைக்காட்சி காண்பித்தும் வருகிறது. இதனால் கொழும்பு கலவரமடைந்துள்ளதிலும் பார்க்க புதுடில்லியே கூடுதலாகக் கலவரமடைந்துள்ளது என சில உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி படுகொலைகளைத் தீட்டியதில் முக்கியமான நபர்களில் ஒருவர் கோத்தபாய ராஜபக்ஷ என்பதை எவராலும் மறுக்கமுடியாது. வெள்ளைக் கொடியோடுவந்த புலிகளின் அரசியல் தலைவர்களை சுடச்சொல்லி உத்தரவு போட்டதும் இவரே, இருப்பினும் இந்தியா ஏன் இதைப்பற்றி யோசித்து கலவரம் அடையவேண்டும் என நினைக்கிறீர்களா ? அங்குதான் இருக்கிறது கோத்தபாயவின் சூட்சும். அதாவது இலங்கை இராணுவம் புலிகளை முள்ளிவாய்க்காலில் முடக்கியவேளை, இறுதி நாட்களில் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களை எவ்வாறு பிடிப்பது, மற்றும் இறுதி யுத்தத்தை வழிநடத்த உதவுங்கள் என்ற கோரிக்கை கோத்தபாயவால் இந்தியாவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிரத்தியேக விமானம் மூலம் சில றோ அதிகாரிகளும், இராணுவ ஆய்வாளர்களும் பலாலி விமானநிலையம் சென்று பின்னர் அங்கிருந்து தரைவழியாக அவர்கள் முகமாலை நோக்கிச் சென்றுள்ளனர். அதாவது இறுதிக்கட்டபோரின் போதும், புலிகள் மற்றும் பொதுமக்கள் கொலைசெய்யப்படும்போதும் இந்திய அதிகாரிகள் அருகில் இருந்துள்ளனர். இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கோத்தபாய பல முக்கியமான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்தியாவும் மொளனமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இருந்தும், தற்போது முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் புதுடில்லியின் பங்கு குறித்த விவரங்கள் தற்போது வெளிப்படையாகக் கிடைக்கின்றன. றோ அல்லாதவர்களை குற்றம்சாட்டுகின்ற ஆதாரங்கள் வெளிவரத்தொடங்கிய இந்நிலையில், இவ்வளவு காலமும் சர்வதேச சமூகத்தினர் போர்க்குற்றங்களுக்கு எதிராகக் கொடுத்துவந்த குரல்களைச் செயற்படாமல் செய்த புதுடில்லியின் மனப்போக்கும் குழப்பமடையத் தொடங்கிவிட்டது. இலங்கை முள்ளிவாய்க்காலில் இருந்த தமிழர்களைக் கொன்று குவித்ததில் இந்தியாவின் அதிகாரப்படியே இலங்கை செயற்பட்டது என்பதை இப்போதைய ஆதாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இறுதிக்கட்டப் போரை நாராயணன் மேனனின் கட்டளைகளுக்கு அமையவே கோத்தபாய முன்னெடுத்தார் என்று சொல்கிறார்கள் சரத்பொன்சேகாவின் சகபாடிகள். இதற்கான ஆதாரங்கள் கூட தம்மிடம் இருப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. மக்களிடையே விடுதலைப் புலிகள் பதுங்கியுள்ளதாக றோ சுட்டிக்காட்டியபோதும், அங்கு அதாவது பாதுகாப்பு வலயத்துக்குள் கடும் தாக்குதலை நடத்துமாறு கூறியது நாராயணனே. உண்மையில் இறுதிக்கட்டப் போரை ஓகஸ்ட் மாதத்தில் நடத்துவதென தீர்மானித்திருந்ததாக சரத் பொன்சேகா தரப்பு தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு அவர்கள் விரும்பினார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்தோடு முள்ளிவாய்க்காலில் இருந்து புலிகள் எவ்விதத்திலும் தப்பமுடியாது என சரத்பொன்சேகா நம்பியிருந்தார்.

இதனிடையே அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள மட்டத்தில் சில தமிழர்களால் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் இன் நடவடிக்கையை விரிவுபடுத்தி மெல்ல நகர்ந்து அமெரிக்க ஜனாதிபதியின் மேசைக்கு கொண்டுசெல்லப்படவிருந்தது. ஆனால் நாராயணனோ, விடுதலைப் புலிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா எடுத்த முயற்சிகளைத் தவிடு பொடியாக்குவதற்காக உடனுமே இறுதிக்கட்டத் தாக்குதலை நடத்தும்படி கட்டளையிட்டுள்ளார். இதன்விளைவாக பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டாலும் அதைத் தவிர்க்க முடியாது என அவர் அறிவுறுத்தியும் உள்ளார். மொத்தத்தில், அச்சமயம் புதுடில்லியின், அதாவது சோனியாவின் அதிகாரத்தின் கீழேயே கோத்தபாய இயங்கி வந்தார்.

இதேவேளை யுத்தகளத்தில் இலங்கை மற்றும் இந்திய ஆயுதப்படைகளின் அருவருக்கத்தக்க செயல்களை வானிலிருந்து இரகசியமாக புலனாய்வு செய்வதற்கான பொறுப்பு றோவிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இக்காலகட்டத்தில் நம்பத்தகுந்த புகைப்படங்களை எடுக்கும் அனுகூலமான நிலையில் றோ இருந்தது. குறிப்பிட்ட சில புகைப்படங்களையும் அது எடுத்துள்ளது. புலிகளை வென்றால் இலங்கை இந்தியாவுக்கு ஒருபோதும் அடிபணியாது என்பதை இந்தியா நன்கு தெரிந்துவைத்திருந்தது. அதனால் எடுக்கப்பட்ட படங்களை தாம் வைத்திருந்தால் அதன் மூலம் இலங்கையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என அது எண்ணியது. ஆனால் இலங்கை சில எதிர்மறையான விளைவுகளையே வெளிப்படுத்தியது.

ஆனால் இலங்கை முகம்கொடுக்க வேண்டிய போர்க் குற்றச்சாட்டுகளில் புதுடில்லியையும் சிக்கவைக்கும் விதத்தில் கோத்தபாய ராஜபக்ஷ கோபத்துடன் தனது சமிக்ஞைகளை வெளிக்காட்டியதும் புதுடில்லி நிலை குழம்பிப்போய் விட்டது. எனவே, உடனும் இலங்கையைச் சமாதானப்படுத்தும் விதத்தில் அவசர அவசரமாக செயல்பட்ட இந்தியா, .நா இல் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்தது. எனவே இந்தியா நீண்ட காலத்துக்கு கொழும்புடன் சேர்ந்து இழுபடவேண்டிய ஒரு கடிவாளம் ஏற்கனவே போடப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ் நாட்டில் போர்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற தமிழர்களின் போராட்டத்திற்கு புதுதில்லி மொளனம் சாதித்ததாலும், மேலும் தி.மு.கா இது குறித்து பேசாததாலும், ஸ்பெக்ரம் விவகாரத்தில் புதுதில்லி எடுத்த கர்வமான முடிவுகளும், தி.மு.காவை மிக மோசமாக பாதிப்படையச் செய்துள்ளது. கலைஞர் தனது கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சியூடாக ஒவ்வொரு நாளும் மறுப்புச் செய்தி கூறிக் கொக்கரிக்கவேண்டி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகளோ இதை விட்டபாடாக இல்லை. தொடர்ந்து 12 நாளாக பாராளுமன்றை முடக்கியுள்ளனர் எதிர்கட்சியினர். ஸ்பெக்ரம் ஊழலில் சுமார் 40 மில்லியன் அமெரிக்க டாலர் கையாடப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்திவெளியிட்டுள்ளது.

எனவே இந்தியாவை மௌனமாக்கி வைத்துள்ள இலங்கை தொடர்ந்தும் தனது இன அழிப்பை இன்னும் வீரியத்துடன் நடத்தி வருகிறது. வட பகுதியை இராணுவ மயமாக்குவதால் மேலும்மேலும் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி வருகின்றனர். மதச்சார்பற்ற சோனியா இந்துசமய இந்தியாவின் தலைவியாக இருக்கும் பட்சத்தில், இலங்கையின் வடக்குக் கிழக்கில் உள்ள இந்துக் கோயில்களில் மணிகளைக்கூட அடிக்ககூடாது என இலங்கை மறிக்கும்போது தமிழர்களும் இந்துக்களும் என்ன செய்யலாம்? இந்தியாவின் நடத்தையானது உலகின் பிற மனித உரிமை குற்றவாளிகளின் நடத்தையைவிட வேறுபட்டதல்ல. இவர்களின் இந்த மௌனமே மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றசாட்டுகளுக்கு குரல்கொடுக்க வேண்டும் என்று ஒபாமா இந்தியாவிடம் வலியுறுத்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு எதிராக இலங்கை முழங்கியிருக்கும் போரானது அந்த நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவாலாக உள்ளது. இந்த நாடுகளில் இலங்கையின் புலனாய்வு அமைப்புகள் பலவும்கூட இயங்கி வருகின்றன. இந்த அமைப்புகள் கொடுத்த புலனாய்வுத் தகவல்களுக்கு அமைய, இலங்கை விஜயம் செய்யும் புலம்பெயர்வாளர்களை இலங்கை பின் தொடர்கிறது. இவ்வாறு பின் தொடரப்பட்டு கைது செய்யப்பட்ட பல தமிழர்கள் காணாமல் போயுள்ளனர், படுகொலை செய்யப்பட்டுள்ளனர், சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவற்றுக்கெல்லாம் அரசின் வெள்ளைவான் கும்பல் உறுதுணையாக இருக்கிறது. ஆனால் தற்போது புலம்பெயர் தமிழர்கள் நடத்திவரும் போர்க்குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஒருவராலும் தடுக்க முடியாத நிலை உள்ளது என்பதே உண்மையாகும்.

மேலும், ஒருவர் வேறொரு நாட்டில் குற்றம் இழைத்திருந்தாலும், அவரை தமது நாடுகளில் கைது செய்யும் சட்ட அமைப்பு மேற்குலக நாடுகளில் உள்ளதை மறந்துவிட முடியாது. இதற்கமையவே கைதாவதில் இருந்து தப்புவதற்காக போர்க் குற்றவாளியான இராணுவ அதிகாரிகள் சிலர் அவசர அவசரமாக விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கை திரும்பினார். இவ்வாறு பல தலைவர்களுக்கும் பெரும் தலையிடியை உருவாக்கியுள்ளமையை, எமது புலம்பெயர் தமிழர்களின் ஒரு சாதனை எனக் கூறலாம். குறைந்தபட்சம் இன அழிப்பிலிருந்தாவது எமது தமிழர்கள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படவேண்டும் என்பதையே புலம்பெயர் தமிழர்கள் வேண்டுகிறார்கள்.

வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட இன அழிப்பாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் தமிழ் புலம்பெயர்வாளர்களின் ஆற்றலை அவர்களுக்கு உணர்த்துகின்றன. மாவீரர் தினத்திற்கு திரண்ட 50,000 பொதுமக்கள் உட்பட மகிந்த எதிர்ப்புக்கு திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களும், அவர்கள் அசைத்த புலிக்கொடியையும் வைத்துப் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் தீவிரமான எழுச்சி விரைவில் வரவுள்ளது என்பதையே எமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுப்பதாக இந்தியாவின் பக்கத்தில் கூறப்பட்டுள்ள போதிலும், அவை ஈழத்துக்குச் சார்பானவை அல்ல. இது இந்திய-இலங்கை உறவுகள் குறித்தவை. ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் தொடர்ந்து இருந்துகொண்டே உள்ளன. இதேவேளை இந்தியாவின் வெளிநாட்டுக்கொள்கையானது பிரதானமாக தமிழ்நாட்டினதும் கேரளாவினதும் ஒன்று அல்லது இரண்டு சமூகக் குழுக்களினால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றின் தவறான அணுகுமுறையே ஈழத் தமிழர்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையே முறுகலைத் தோற்றுவித்தது. சரியான கருத்துக்கள் மக்களிடம் செல்வதை இவை மறைத்துவிட்டன. இதுவே ஈழத் தமிழர்களின் இன அழிப்புக்கு பங்களித்தன.

இதனால் தென்னிந்தியாவில் சீன ஆதிக்கம் வருவதற்கான வழியை அமைத்துக் கொடுத்தது. இப்போது இதற்கு என்ன செய்யலாம் என்று அவர்கள் கலந்துரையாட விரும்புகிறார்கள். ராஜபக்ஷவுக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளை இந்தியா எதிர்க்கப் போகிறது. இதேபோன்ற குற்றச்சாட்டுகளையே காஷ்மீர் விடயத்திலும் இந்தியா எதிர்கொள்கிறது என்று சில உண்மைகள் விவேகமான தேடுதல்கள் மூலம் தெரியவருகிறது.

இந்தியா காஷ்மீர் விடயத்தில் பல படுகொலைகளைச் செய்தது. எனவே இதேபோன்ற படுகொலைகளைச் செய்த இலங்கைக்கு ஆதரவாக இருப்பதையும் தர்க்கரீதியில் ஏற்றுக்கொள்ளலாம். 1987 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையானது அதிகாரத்தில் இருந்த நபரின் தனிப்பட்ட மனப்போக்கால் அமைக்கப்படவுமில்லை, ஆதிக்கம் செலுத்தப்படவும் இல்லை. ஆனால் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசாங்கம் மாறியபோது வெளிநாட்டுக் கொள்கையில் அதிகாரத்திலுள்ள தனிநபரின் ஆதிக்கமே எல்லாவற்றையும் முன்னெடுத்தது எனலாம்.

எனினும் அண்மைய பீகார் தேர்தல் முடிவுகள், சோனியா-ராஹுல் காந்தியின் இணைப்பையும், அவர்களின் தனிப்பட்ட மனப்போக்கில் நடக்கும் ஆட்சியையும் உடைக்க விரும்பும் தமிழர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. எனவே இந்தப் பிணைப்பு உடையும் காலம் வெகுதூரத்திலில்லை. அதன்பின்னர் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும் 2004 ஆம் ஆண்டுக்கு முந்தையதைப் போல வரலாம். அதனால் ஈழத் தமிழர்களுக்கு அனுகூலமான பல விடையங்கள் நடந்தேறலாம்.

இச் செய்தி அதிர்விலிருந்து...

0 Responses to சிறிலங்கா போர்க்குற்றங்கள் தொடர்பில் புதுடில்லியே கலவரத்தில் உள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com