
கடந்த ஆண்டில் மிலேச்சத்தனமாக தமிழர் மீது இனப்படுகொலையை நடாத்தி முடித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் பிரித்தானிய இராச்சிய விஜயம் எந்த மனித உரிமை அமைப்புகளாலும் தடுக்க முடியவில்லை.
4௦௦௦௦ தமிழர்கள் 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் எனக்கூறும் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது இதர மனித உரிமை அமைப்புகளோ இந்த இனப்படுகொலைகளின் கதாநாயகனை சட்ட வலைப்பின்னலுக்குள் மாட்ட முடியாதிருப்பது எமது துரதிஷ்டமே.
இந்த போர் குற்றங்களுக்கு எதிராக ரோம் நகரில் கைச்சாத்திட்ட மேற்குலகம் இவரை ஐரோப்பிய நாடுகளில் நுழைய அனுமதி வழங்கியதை நெதர்லாந்து தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
எம் மக்களே இவரையும் இவரது இராணுவ சகாக்களையும் போர்குற்ற சட்டங்கள் மூலம் தண்டிக்கப் பட வேண்டும் என எண்ணுவீர்கள் ஆயின் தகுந்த ஆதாரங்கள் இன்னும் மிக விரைவாக சேகரிக்கப்பட வேண்டும்.
ஆகவே நெதர்லாந்து தமிழர் பேரவையினால் மேற்கொள்ளப் பட்டிருக்கும் போர்குற்ற ஆவணப்படுத்தலுக்கு உங்கள் ஒத்துழைப்பை மிக விரைவாக வேண்டி நிற்கிறோம்.
நெதர்லாந்து தமிழர் பேரவை
0 Responses to மஹிந்தவை பிரிட்டனிற்குள் நுழைய அனுமதித்ததை கண்டித்து நெதர்லாந்து தமிழர் பேரவை அறிக்கை