Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

லண்டன் தமிழ் இளைஞர் கொழும்பில் கைது

பதிந்தவர்: ஈழப்பிரியா 31 December 2010

லண்டனில் இருந்து சென்ற தமிழ் இளைஞர் கொழும்பில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சஞ்சய் ரவீந்திரன் என்ற சிறிலங்கா மற்றும் பிரித்தானிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள இளைஞரே கைது செய்யபட்டுள்ளவராவார்.

லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட இவர், எட்டு போத்தல்களில் நீர் மாதிரிகளைஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள பெய்ரா ஏரியில் இருந்து எடுத்துக் கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினரின் விசாரணைகளின் போது அந்த இளைஞர், தான் நீர் மாசுபாடு குறித்த பட்டப்பின்படிப்பு ஆராய்ச்சிக்காகவே லண்டனில் இருந்து கொழும்பு வந்ததாகக் கூறியுள்ளார்.

இந்த இளைஞர் லண்டன் ஹீத்ரோ வானூர்தி நிலையத்தில் பணியாற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to லண்டன் தமிழ் இளைஞர் கொழும்பில் கைது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com