Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழில் தேசியக்கீதத்தை பாடக்கூடாது என்பதை எதிர்த்தமை காரணமாகவே வலிகாமம் வடக்கு உதவிக்கல்விப்பணிப்பாளர் கொல்லப்பட்டதாக இலங்கைவின் மனித உரிமைகள்
இயக்கமான "உரிமைகளுக்கான வலையமைப்பு" குற்றம் சுமத்தியுள்ளது.

52 வயதான மார்க்கண்டு சிவலிங்கம் என்ற இந்த உதவிக் கல்விப் பணிப்பாளர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கோப்பாய், உரும்பிராயில் உள்ள தமது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேசிய பாதுகாப்பு தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போது அதில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசியக்கீதம் பாடப்பட்டது. இதனை ஆட்சேபித்தமைக்காகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக குறித்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த நிகழ்வுக்கு பாடசாலை பிள்ளைகளையும் அவர் அனுமதிக்கவில்லை என்பதும் கொலைக்கு காரணமாக இருந்தது என உரிமைகளுக்கான வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த கொலையை இலங்கைவின் படையினரே மேற்கொண்டதாக தமிழ்நெற் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது

சிங்களத்தில் மாத்திரமே குறித்த தேசிய பாதுகாப்பு நாளில் பாடப்படவேண்டும் என்ற சுற்றுநிருபம் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இலங்கை அரசாங்கம், இவ்வாறான சுற்றுநிருபம் ஒன்று அனுப்பப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

0 Responses to தமிழில் தேசியக்கீதத்தை பாடக்கூடாது - கல்விப் பணிப்பாளர் கொல்லப்பட்டார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com