மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி சென்னை பிரித்தானிய தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்த தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பிரித்தானிய சென்றதையொட்டி பிரித்தானிய வாழ் தமிழர்கள் மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை சென்னையிலுள்ள பிரித்தானிய தூதரகத்தை முற்றுகையிட்டு பெரியார் திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் இருநூறுக்கும் மேற்பட்டோர் மாணவர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ந.பன்னீர் செல்வம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு ஆதரவாக சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியின் தலைவர் வழக்கறிஞர் ரஜினிகாந்த், நாம் தமிழர் கட்சியின் சென்னை பொறுப்பாளர் அதியமான் மற்றும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இடையில் தமிழ்நாடு மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் ந.பன்னீர்ச்செல்வம் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றினை அளித்தார்.
பிரித்தானிய தூதரகம் முன்னால் அனுமதியின்றி போராட்டம் செய்ததால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 140 பேர் கைது செய்யப்பட்டு மாலை 6 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கோவை, சேலம், செங்கல்பட்டு கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டு கைதாகினர்.

0 Responses to ராஜபக்சேவை கைது செய்யக்கோரி சென்னை பிரித்தானிய தூதரகம் மாணவர்களால் முற்றுகை