Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னி மக்களின் துயரங்களை புரிந்து கொள்ளாமல் புலம்பெயர் தமிழர்கள் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வதாகவும் அதை மக்கள் எதிர்ப்பதாகவும் கூறி முற்றுமுழுதான இராணுவத்தினரின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்டது.

இன்று காலை 11.45 மணிக்கு நடந்த மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஜனாதிபதிக்கு ஆதரான கோஷங்களையும் புலம்பெயர் தமிழர்களுக்கெதிரான கோஷங்களையும் போட்டவண்ணம் கிளிநொச்சி பஸ்நிலையத்தில் இருந்து தண்ணீர்த்தாங்கி வரைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்து சென்றனர்.

இதற்காக கிளிநொச்சியின் கிராமப்புறங்களில் இராணுவத்தினர் புகுந்து அங்குள்ள குடும்பங்களின் பெயர் விபரங்களை இன்று காலை பெற்றுள்ளதுடன் 10 மணிக்கு உங்களுக்கான வாகனங்கள் வரும். ஏறிப்போக வேண்டும். இல்லாவிட்டால் வருகிற ஆபத்துக்களுக்கு தாம் பொறுப்பல்ல எனக் கூறி, அவ் அப்பாவிமக்களை அடாவடித்தனமாக வாகனங்களில் ஏற வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தினர்.

மேலும் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் தலைவர்களுக்கும் இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதன்போது புலம்பெயர் மக்கள் வன்னி மக்களின் துயரங்களை புரிந்து கொள்ளாமல் ஜனாதிபதியின் உரையை தடுத்ததாகவும் அந்த உரையின் முலம் தமிழர்களுக்கு பல உதவிகள் கிடைக்க இருந்ததாகவும் இராணுவத்தினர் பிரசாரங்களையும் நடத்தியுள்ளனர்.

தொடரும் மழைகாரணமாக மக்கள் இன்றும் வெள்ளங்களுக்;குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடு மக்களை வதைக்கும் ஒரு செயலேயாகும் எனவும் மக்கள் மீளக்குடியமராத சூழலில் முகாம்களுக்குள் இருந்து துன்பப்படுகின்றபோது வெற்றி விழா கொண்டாடியவர்களுக்கு இப்போது கரிசனை எங்கிருந்து வந்தது எனவும் மக்கள் சில இடங்களில் கேட்டுள்ளனர்.

மேலும் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் சூழலில் இவ்வாறான செயற்பாடுகள் முலம் அதனை குழப்பும் ஒரு செயற்பாடாகவும் இது அமைந்ததாக அவதானிகள் கூறுகின்றனர். இராணுவத்தினரின் இந்த செயற்பாடு பாதிக்கப்பட்ட பின்தங்கிய கிராமங்களிலே அப்பாவி மக்களுக்கு நடந்துள்ளது.



0 Responses to இராணுவத்தினரின் ஏற்பாட்டில் மகிந்தவுக்கு ஆதரவாக வன்னி மக்களின் ஆர்ப்பாட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com