அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை அருகில் உள்ள கட்டிடம் ஒன்றில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை பொலிசார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
கொழும்பு-01 கோட்டைப் பிரதேசத்தின் பெரும்பகுதி ஜனாதிபதி மாளிகையின் அமைவிடம் காரணமாக அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு சோதனைச் சாவடி மற்றும் அப்பிரதேசத்திலுள்ள அனைத்து கட்டிடங்களின் உச்சியிலும் கண்காணிப்பு இராணுவத்தினர் என முற்று முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் அப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் எட்டுமாடிக் கட்டிடம் ஒன்றில் நீண்ட காலமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை நேற்று பொலிசார் முற்றுகையிட்டுள்ளனர்.
அங்கிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த இரண்டு யுவதிகளும், மூன்று இலங்கைப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இவ்வாறானதொரு விபச்சார விடுதி அமைந்திருந்தமையானது பலருக்கும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் உச்சகட்ட ஆதரவுடன் அது இயங்கி வந்ததா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.

0 Responses to மகிந்தவின் மாளிகை அருகில் விபச்சார விடுதி