Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக 6 இலட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களின் வீடுகளிலும், முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் மாத்திரம் 4 இலட்சத்து 21 ஆயிரத்து 809 பேர் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்படைந்தவர்களில் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 105 பேர் பொது இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி பிபிசிக்குத் தெரிவித்தார்.

நாட்டின் பல பகுதிகளிலும் சுமார் ஏழரை லட்சம் பேர்வரை மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக குறிப்பாக கிழக்குப் பகுதிகளில் சுமார் 55 ஆயிரம் பேர் தற்காலிக இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

மண்சரிவு மற்றும் ஆற்று நீரில் அள்ளுண்டு சென்ற சம்பவங்களாலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாத்தளை, பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் அப்பகுதிகளில் ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகரும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி கூறினார்.

இதேவேளை கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்ட பெருமளவிலான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வீதிகளில் மரங்களும் மின் கம்பங்களும் சரிந்து பிரதேசத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்திலும் மூதூர் கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்கனவே யுத்தத்தால் இடம்பெயர்ந்து இதுவரை மீளக்குடியமர்த்தப்படாதிருப்பவர்கள் பெரும் துயரங்களை அனுபவிப்பதாக தமிழோசையிடம் தெரிவித்தனர்.

0 Responses to கிழக்கு மாகாணத்தில் 6 இலட்சம் பேரை பாதிப்புக்குள்ளாக்கிய அடைமழை (காணொளி)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com