தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவர் மெய்ப் பாதுகாப்பாளர்களால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேறு எங்கும் பார்க்க முடியாத அளவு பாதுகாப்பு வாய்ந்தது என இலங்கை இராணுவத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேசியத் தலைவர் இரவு நேரத்தில் தங்கும் இடம் ஒன்றை தற்போது இராணுவம் தனது இரகசியக் கட்டளைபீடம் ஒன்றாக மாற்றியுள்ளதாக அறியப்படுகிறது. இந்த இரகசியக் கட்டளை பீடத்துக்குச் சென்ற நபர் ஒருவருக்கு மேற்படி இராணுவம் இத் தகவல்களைத் தெரிவித்துள்ளது.
அதன் முக்கிய நபர் ஒருவருக்கு "மொசாட் படை" எவ்வாறு பாதுகாப்பு வழங்குமோ அதுபோலவே தேசியத் தலைவரின் பாதுகாப்பும் அமைந்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 6 கிலோமீற்றர் சுற்றளவுள்ள மூன்று முட்கம்பி வேலிகளால் ஆன சுற்று வளையம் ஒன்றுக்குள் தேசியத் தலைவர் தங்குமிடம் இருந்ததாகவும், அதனைச் சுற்றி 10 காவலரண்கள் இருந்ததாகவும், அவை ரோந்தில் ஈடுபடும் வண்ணம் அமைந்திருந்ததாகவும் அறியப்படுகிறது.
பின்னர் அந்தச் சுற்றுவளையத்தைச் சுற்றி அடுத்த முட்கம்பிகள் போடப்பட்டு, 7 காவலரண்கள் சீரான முறையில் அமைந்திருந்ததாகவும், அதன் பின்னரே தேசியத் தலைவர் தங்கியிருந்த வீடு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு சுற்றுவட்டப் பாதையில் இரவுநேரங்களில் 3 அடுக்குகளாக ரோந்து செல்லக்கூடிய வகையில் அது அமைந்திருந்தது என் குறப்படுகிறது.
அவரது வீட்டிற்கு நேரடியாக உள்ளே செல்லக்கூடிய ஒரு பாதையும், பின்புறமாகவும் வேகமாகவும் பதுங்கு குழிக்குள் செல்லக்கூடிய வகையில் ஒரு பாதை இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது இலங்கை போர் விமானங்கள் அவர் வாகனத் தொடரணியை பின் தொடர்ந்து வந்தால் கூட, அவர் வாகனம் நேரடியாக சுரங்கப் பாதைக்கு செல்லும் திறன்கொண்டதாக அது அமைந்துள்ளது என அவ்வதிகாரி விளக்கியுள்ளார். இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவான "மொசாட்" அமைப்பாலேயே அதிகம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் விவரித்துள்ளார். அதுபோல மொசாட் படையினர் கொடுக்கும் ஆலோசனைகளைப் போன்ற அமைப்புகளே அங்கே காணப்பட்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
மிகவும் நேர்த்தியாகவும், சமாந்தரமாகவும் எவரும் உட்புகுமுடியாத அளவு உச்சக்கட்ட பாதுகாப்பு அவருக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தலைவரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், முக்கிய நபர்களைப் பாதுகாக்கும் பயிற்சிகளைப் பெற்றிருந்ததாகவும், அவர்கள் பல வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் எவ்வாறு தனது தலைவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற விடையத்தை நன்குகற்றுத் தெரிந்துவைத்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப் பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பல புத்தகங்களும், பாதுகாப்பு சம்பந்தமான வீடியோக்களுமே இதற்கு ஆதரம் என்கிறார் அந்த அதிகாரி. தேசிய தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும், அவ்விடத்தை இராணுவம் தற்போது இரகசியக் கட்டளைப் பீடமாக மாற்றியுள்ளதாகவும் அறியப்படுகிறது.
இச் செய்தி அதிர்விலிருந்து...

0 Responses to "இஸ்ரேல் மொசாட் படை" வழங்கும் ஒத்த பாதுகாப்பு தேசியத் தலைவருக்கு வழங்கப்பட்டதா? (படங்கள் இணைப்பு)