Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ தாயக பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அவசர நிவாரணங்களை மேற்கொள்ளுமாறு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனங்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசினால் வெளியிடப்பட்ட செய்திக்ககுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐக்கிய நாடுகள் மனிதாபிமான உதவி வழங்குவதற்கான நிறுவனம் (OCHA), ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக மேப்பாட்டுக்கான உதவி வழங்கும் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான மற்றும் சிவில் பாதுகாப்புக்கான அமைப்பு (ECHO) உட்பட பல்வேறு அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தொடர்புகளைப் பேணி வருகிறது.

இவ் விடயம் தொடர்பாக அனைத்துலக உதவி வழங்கும் அமைப்புகளுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநான் ருத்தரகுமாரன் விடுத்த அவசர வேண்டுகோளில், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவசர உதவி வழங்கப்பட வேண்டிய பிரதேசங்களாகப் பிரகடனம் செய்து, மக்களுக்கான உதவிகள் உடனடியான சென்றடைவதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறு கோரியதுடன், இவ் அமைப்புக்களுடன் இணைந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளத் தயாராக இருக்கிறது என்பதனையும் தெரிவித்துள்ளார்.

இவ் உதவி நிறுவனங்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் சென்றடைவதற்கான அனைத்துலக சமூகத்தின் இயங்குபொறிமுறையினை வேகமாகச் இயங்க வைப்பதற்கான செயற்பாடுகளைத் தொடர்ச்சியான மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை வழங்குவதில் புலத்திலும் களத்திலும் மக்கள் காட்டி வரும் அக்கறையான செயற்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உற்சாகப்படுத்தும் அதேவேளை, இவ் உதவி வழங்கும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்துவும் விரிவுபடுத்தவும் வேண்டிய அவசியத்தினைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறு புலத்திலும் தமிழகம் உட்பட உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக் கொள்கிறது.

பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

0 Responses to வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு நாடுகடந்த தமிழீழ அரசு கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com