Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொன்சேகாவுக்கு திடீர் சுகவீனம்!

பதிந்தவர்: ஈழப்பிரியா 09 January 2011

வெலிக்கடையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் இராணுவத்தளபதி மீண்டும் திடீரென நோயவாய்ப்பட்டுள்ளார். உள்ளூர் வைத்தியர்களால் சிறைச்சாலையில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் எந்தப் பயனையும் அளிக்கவில்லை என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்திற்கொள்ளும்போது அவர் முழுமையான வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியவராக உள்ளார் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் அலஸ் வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார் என கூறப்படுகிறது.

சரத் பொன்சேகா முழுமையான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்றும் இதன் காரணமாக சிங்கப்பூரைச் சோ்ந்த விஷேட வைத்திய குழுவினரை இலங்கைக்கு வரவழைக்கவேண்டும் எனவும் அவர் சிறைச்சாலை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

0 Responses to பொன்சேகாவுக்கு திடீர் சுகவீனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com