இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை மனுத்தாக்கலுக்கான கால எல்லை நீடிப்பைத் தொடர்ந்து, கனடியத் தமிழர் தேசிய அவை, அனைத்து மக்களையும் தொடர்ந்தும் தமது மனுக்களை ஐ. நா. சபையின் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குழுவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றது.
மின்னஞ்சல் வாயிலான முறைப்பாடுகள் நிறைந்துள்ளமையினாலும்,அதன் காரணமாக தொடர்ந்து மின்னஞ்சலைப் பெற முடியாமையினாலும், முறைப்பாட்டுக் கடிதங்களைத் தகுந்த முறையில் பெற்றுக்கொள்வதற்கு ஊழியர்கள் இல்லாமையினாலும் போர்க்குற்ற மனுத்தாக்கலுக்கான கால எல்லை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஐ. நா. சபையின் உதவிக்காரியதரிசி உறுதிப்படுத்தியுள்ளார். 2009 மே மாதம், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது ஆகக் குறைந்தது 20,000 அப்பாவிப் பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து எம்மக்களின் பல போராட்டங்கள், செயற்பாடுகளின் விளைவாக, ஐக்கிய நாடுகள் சபையின் காரியதரிசி பான் கீ. மூனினால் ஜூன் 22, 2010 உருவாக்கப்பட்ட குழுவிற்கு, இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமை மீறல்கள் பற்றிய தகவல்களை வழங்கும் பொறுப்பு. பணிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
கனடியத் தமிழர் தேசிய அவையின் பேச்சாளரான கிருஷ்ணா சரவணமுத்து அவர்கள் தனது கருத்தைத் தெரிவிக்கையில், “இலங்கை அரசுக்கெதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்காக பரிந்துரை செய்யப்படுகின்ற நம்பகத் தன்மை வாய்ந்த போதியளவு ஆதாரங்கள், மனுக்கள் என்பன சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், உலக அரங்கில் எமக்கான நீதியை நாம் பெறுவதில், பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும், எனவும் “ இன்றைய கால கட்டத்திலே கிடைக்கப்பெறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் சரியாக, அதிலும் சாதுரியமாகப் பயன்படுத்துதல் என்பது தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரினதும் வரலாற்றுக்கடமை” எனவும் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தின் மூலம் மகிந்த ராஜபக்சவினாலும் அவரது சகோதரரான கோத்த பாய ராஜபக்சவினாலும் எமது மக்கள் மீது நிகழ்த்திய, நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற போர்க்குற்றங்களையும் அத்து மீறல்களையும் நினைவில் நிறுத்தி, போதிய மனுக்கள் ஆதாரங்கள் என்பவற்றை சமர்ப்பிக்குமாறு அனைத்து மக்களையும் க. த. தே. அவை வேண்டி நிற்கின்றது. உலக வரலாற்றிலேயே மிகப் பெரும் மனிதப் படுகொலைகள் இடம்பெற்ற இலங்கைத் தீவிலே உரிய பாதுகாப்பும், சமாதானமும் நிலவ வேண்டுமாயின், தனித்துவமான, மற்றும் நடுநிலைமையினாலான விசாரணைகள் மூலம் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதை ஐ. நாவினால் நியமிக்கப்பட்ட குழுவிற்கு எம்மால் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மூலம் தெளிவு படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதற்கான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.
ஆங்கிலத்தில் தொடர்புகளுக்கு:
கிருஷ்ணா சரவணமுத்து (க.த.தே.அ பேச்சாளர்)
647-448-0576
krisna@ncctcanada.ca
தமிழில் தொடர்புகளுக்கு:
கவிதா செந்தில் (க.த.தே.அ பேச்சாளர்)
647-637-4803
info@ncctcanada.ca

0 Responses to இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணை மனுத்தாக்கலுக்கான கால எல்லை நீடிப்பு