யாழ். புங்குடுதீவில் இளம் யுவதியொருவரின் சடலம் பாழடைந்த கிணறொன்றுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளதாக எமது யாழ். தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவின் மூன்றாம் வட்டாரம் சங்கத்தாக்கேணி பிரதேசத்தில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மாடுகளை மேய்க்கச் சென்ற வாலிபர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து வழங்கிய தகவலின் அடிப்படையில் தேடிப்பார்த்த போதே சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பொலிசார் நீதவான் முன்னிலையில் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் மிகவும் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன், சடலத்துடன் இளம் யுவதிகள் அணியும் உள்ளாடைகளும் பொலிசாரால் மீட்கப்பட்டதாக தெரிய வருகின்றது.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

0 Responses to கொலைகளின் களமாகும் யாழ் - கிணற்றுக்குள்ளிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது