Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீமான் வைகோ சந்திப்பிற்கு பிறகு தமிழக அரசியலில் புதிய பரப்பரப்பு தொற்றி கொண்டிருக்கிறது. காங்கிரஸ் தி.மு. கூட்டணியை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலும் அகற்றாத வரை தமிழனுக்கு விடிவில்லை.என்று சீமான் பரப்புரை செய்து வந்தார்.

அதே நேரத்தில் தி.மு. தமிழனத்தை அழித்த துரோகி என்றும், .தி.மு. தமிழனின் எதிரி என்றும் கூறி வந்த சீமான் திடிரென்று வை. கோ சந்திப்பிற்கு பிறகு .தி.மு. வை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

இவர்கள் சந்திப்பிற்கு ஒரு நாள் முன்னால் தான் தனது பலத்தை அதிமுக உணர வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான மக்களின் கூட்டத்தை விஜயகாந்த் கூட்டியிருந்தார். இதன் மூலம் அவர் தேர்தலில் தான் அதிக இடம் எதிர்பார்ப்பதை மறைமுகமாக ஜெயலிதாவிற்கு உணர்த்தியிருக்கிறார். அதை பற்றி சிறிது அலசி பார்ப்போம்.

ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது அதற்காக எதுவும் செய்யாமல் ஒதுங்கி நின்றவர் விஜயகாந்த். திரைப் படங்களில் வீர வசனம் பேசி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர் போல் தன்னை காட்டி கொண்டு வெளி நாடுகளில் தனது படங்களின் விறபனையை உயர்த்தி கொண்ட விஜயகாந்த் ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை எதுவும் செய்ய வில்லை.தனது திருமண மண்டபம் இடிப்பதை தடுப்பதற்காக போராடிய விஜயகாந்த் மக்கள் கொத்து கொத்தாக செத்து விழும் போது அமைதியாக இருந்தார் .

திருமாவளவன் தமிழர் இறையாண்மை காக்க தி.மு.,காங்கிரஸ் கூட்டணியில் இருக்கப்போவதாக உறுதியாக கூறி விட்டார். முத்துக்குமரனின் இறப்பால் ஏற்பட்ட மிக பெரிய எழுச்சியை இவர் உட்புகுந்து அடக்கிய விதம் அனைவரும் அறிந்ததே. அதற்காக இவர் கருணாநிதியிடம் பெற்ற கோடிக்கணக்கான பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் தன் சாதி மக்களுக்கு கூட செலவழிக்காமல் தமிழ்நாடு முழுக்க விளம்பரமாய் எழுதி தீர்த்து வருகிறார்.

தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது அதை காப்பாற்ற நாங்கள் பதவி விலக தயார். ஆனால் முதலில் கருணாநிதி பதவியை விட்டு விலக வேண்டும். அவர் விலகி னால்தான் நாங்கள் பதவியை விட்டு விலகுவோம் என்று கூறி தனது இனப் பற்றை தெளிவாக பறை சாற்றியவர் தலைவர் ராமதாஸ் இன்று அவர் தி.மு. வா .தி.மு. வா என்று ஆலோசித்து கொண்டிருக்கிறார் அநேகமாக அவர் தி.மு. வில் தான் சேருவதற்கான வாய்ப்புகள் தான் ஒளி வட்டமாக தெரிகிறது.

பாலஸ்தீனத்தில் இறந்த நூறு பேருக்காக கண்டன குரல் எழுப்பிய ஜெயலலிதா, தமிழீழத்தில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கும் போது "போர் என்றால் மக்கள் இறப்பது இயல்புதானே" என்று உரக்க கூறியவர். ஈழ விடுதலைக்கு முற்றிலும் எதிராக இருந்தவர் .சிறிது நாட்களிலேயே தேர்தலுக்காக மனம் மாறி நான் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு அமைய
பாடுபடுவேன் என்று பெயரளவில் கூறியதற்கு கூட வை கோ தான் காரணம்.

தமிழ் நாட்டில் இன்று இருக்கும் கட்சிகளில் .தி.மு., தி.மு., காங்கிரஸ், தே..மு.தி. ஆகிய நான்கும் முதன்மை கட்சிகளாக விளங்குகிறது . உலக தமிழர்கள் ஆதரவால் இரண்டாம் கட்ட கட்சிகளுக்கு தலைமை ஏற்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி இன்று வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நிர்கதியாக நிற்கும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக குரல் கொடுத்து கொண்டிருப்பது சீமானும், வை.கோ வும் மட்டுமே.

கடந்த தேர்தலில் வை.கோ வெற்றி பெற்றிருந்தால் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு குரல், உலகப் பார்வையை ஈர்க்கும் வண்ணம் ஒலித்திருக்கும். ஆனால் தி.மு. வின் பண பலத்தின் முன்பு வை கோ வும் தோல்வியை தழுவினார்.

வை.கோ வும் தெலுங்கு வகுப்பை சேர்ந்தவராக இருந்தாலும் இனப்பற்றால் அவர் இன்று வரை தமிழனாக இருந்து வருகிறார்.ஈழப் போர் நடந்து கொண்டிருந்த கால கட்டத்தில் அவரிடம் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை எதிர்பார்த்த மக்கள் ஏமாந்து போயினர். நேற்று வந்த சீமானால் இந்த அளவிற்கு உணர்வாளர்களை திரட்டி போராட முடியும் என்றால் 18 வருடமாக கட்சி நடத்தி கொண்டி ருக்கும் வை.கோ எவ்வளவோ போராடி இருக்க முடியும். எவ்வாறு இருப்பினும் ஈழ தமிழனுக்காக இன்று வரை தொடர்ந்து குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் செயல் பட்டு கொண்டி ருப்பவர் வை.கோ மட்டும் தான்.

இந்த சூழ்நிலையில் வரும் தேர்தல் கூட்டணியில் விஜகாந்த்தை விட வை கோ விற்கு குறைவான இடம் தான் கிடைக்கும் .என்பது உறுதியாக தெரிகிறது. கிடைக்கும் இடங்களில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் பலத்தை கொண்டு சிறப்பான வெற்றியை பெற முடியும் என்பது வை கோ வின் கணக்கு. தி மு கவை ஒழிக்கும் அதே நேரத்தில் ஈழ ஆதரவு கட்சியான தி மு கவை வெற்றி பெற வைக்க முடியும் என்பது சீமானின் கணிப்பு. ஈழத்துக்கு ஆதரவான கட்சிகளை ஒன்று சேர்க்கும் முதல் முயற்சியாக இதை பயன் படுத்தி கொள்ள சீமான் நினைக்கலாம்.இந்த தேர்தல் பரப்புரையை கொண்டு நாம் தமிழர் கட்சியை பலப்படுத்தலாம்.ஆனால் சீமானை ஊறுகாயை போல் பயன் படுத்தி கொள்ள திராவிட கட்சிகள் முனையலாம். உலக தமிழர்கள் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் விதமாகவும் இருக்கலாம். திராவிடத்திற்கு ஆதரவாக சீமான் செல்லும் பாதை- கரணம் தப்பினால் மரணம் நிச்சயம்.

அரசியல் ரீதியாக சீமான் செல்லும் பாதை சரியாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சியினரிடையே திராவிடத்தை எதிர்ப்பதாக கூறி விட்டு நேரடியாக ஆதரவு தருவதா என்ற கருத்தும் நிலவுகிறது.

தேசிய தலைவரின் தம்பியாக சீமான் செல்லும் பாதையில் அணி வகுத்து நிற்க உங்கள் தம்பிகள் நாங்கள் தயாராக இருக்கிறோம் .எங்கள் தாய் மேல் நாங்கள் வைக்கும் நம்பிக்கையை உங்கள் மேல் வைத்து உங்களை பின் தொடர்கிறோம். ஆனால் மீண்டும் ஒரு அரசியல் ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் சக்தி எங்களுக்கு கிடையாது நாங்கள் உங்களிடம் எதிர்ப்பார்ப்பது ஒன்று தான்.

தேசிய தலைவரின் தம்பியாக செயல்பட்டு கொண்டிருக்கும் நீங்கள், அவர் சொன்ன உறுதி மொழியை போல் உலக தமிழர்களுக்கு நீங்கள் ஒரு உறுதி மொழியை பகீரங்கமாக அறிவிக்க வேண்டும் அது

"தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் பின் வாங்கினாலோ,அல்லது தமிழின விடுதலைக்கு துரோகம் செய்தாலோ, தமிழினத்திற்கு எதிராக செயல் பட்டாலோ என்னை கொன்று விடுங்கள் அல்லது நானே தற்கொலை செய்து கொல்வேன்." சொல்வீர்களா அண்ணா?

அன்புடன் உங்கள் தம்பி
தமிழ் தேவன்

devacs@gmail.com

1 Response to சீமான் செல்லும் பாதை- கறணம் தப்பினால் மரணம் நிச்சயம்

  1. Balaji Says:
  2. "தமிழீழம் என்ற கொள்கையிலிருந்து நான் பின் வாங்கினாலோ,அல்லது தமிழின விடுதலைக்கு துரோகம் செய்தாலோ, தமிழினத்திற்கு எதிராக செயல் பட்டாலோ என்னை கொன்று விடுங்கள் அல்லது நானே தற்கொலை செய்து கொல்வேன்." சொல்வீர்களா அண்ணா?

    பதில் வருமா? சந்தேகம்தான்!

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com