Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்தில் படுகொலைகளை அரங்கேற்றி வரும் ஆயுததாரிகளால் அடுத்ததாக யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் இலக்கு வைக்கப்படலாம் என்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அச்சம் தெ ரிவித்துள்ளது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் குற்றச்செயல்கள் தொடர்பில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்தவாறான அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெ ரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல்கலைக்கழக மாணவர்களின் புகைப்படங்களைக் காட்டி மற்றவர்களிடம் தகவல் சேகரித்து வருவதாகவும் அறியக் கிடைத்துள்ளது.

அவ்வாறு அவர்கள் வைத்திருக்கும் புகைப்படங்களில் காணப்படும் மாணவர்கள் அடுத்ததாக ஆயுதக்குழுவின் இலக்காக அமையலாம் என்ற பயம் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அதன் காரணமாக பல்கலைக்கழக கல்விக்கான மனோநிலையும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களும் கடும் அச்சத்துடன் இருக்கின்றனர்.ஆயினும் அது தொடர்பில் இதுவரை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், கப்பம் கோரல் என எந்தவொரு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றாவளிகளும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அந்த வகையில் ஏதோவொரு ஆயுதக்கும்பல் யாழ்ப்பாணத்தில் வன்முறையை தூண்டிவிட திட்டம் வகுத்து செயற்படுவதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது என்றும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

0 Responses to அடுத்த இலக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com