Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத்தளபதியை அவுஸ்திரேலியாவுக்கான சிறிலங்கா தூதுவராக ஏற்றுக்கொண்டால் அந்நாட்டில் வாழும் தமிழ்மக்களுக்கு அந்நாட்டு அரசு துரோகமிழைத்ததாகவே இருக்கும் என அவுஸ்திரேலய தமிழர் பேரவை பேச்சாளர் சாம்பவி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையானது இறுதியுத்தத்தின்போது செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல்களை தடுத்ததுடன் கடலிலிருந்து மக்கள் வாழிடங்களை நோக்கி கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டது எனவும், எனவே அவரது நியமனத்தை நிராகரிக்கவேண்டும் எனவும், அந்நாட்டு அரசிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

தமிழீழ தமிழ்மக்களை தாக்கியதோடு மட்டுமல்லாது 500 இற்கும் மேற்பட்ட தமிழ் நாட்டு மீனவர்களின் கொலைகளிலும் சிறிலங்கா கடற்படை நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு மீனவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்நிலையில் சிறிலங்கா அரசின் நியமனத்தை ஏற்றுக்கொள்வீர்களா என அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் கெவின் ரட்டிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

0 Responses to அவுஸ்திரேலிய தூதராக சிறிலங்கா கடற்படை தளபதி நியமனம் செய்யப்படலாம்! நிராகரிக்குமாறு தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com