Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகப் பயணிக்கும் தமிழர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்படுவது மிகவும் அதிகரித்திருப்பதாக, லங்கா கார்டியன் என்ற இணையத்தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.

திட்டமிட்ட வகையில் தமிழர்கள் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருவதுடன், மேலும் சிலர் இலக்கமற்ற வெள்ளைச் சிற்றூந்தில் அடையாளம் தெரியாத இடங்களில் கொண்டு (கடத்திச்) செல்லப்படுவதாகவும் இந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.

நாட்டிற்குள்ளே வரும்போது கைது செய்வது, நாட்டிற்குள் அனுமதித்துவிட்டுக் கைது செய்வது மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும்போது கைது செய்வது போன்ற நடைமுறைகளை படைப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து பயணிகள் வருவதற்கு முன்னரே அவர்கள் பற்றிய விபரங்களை (சிறீலங்கான் எயார்லைன்ஸ் வானூர்தி சேவையிடம் இருந்து பெற்று) படைப் புலனாய்வாளர்கள் வைத்திருந்தே, தமிழர்களைத் தேடிக் கைது செய்வதாகவும், பல மணி நேரங்கள் தடுத்து வைத்து சோதனை, விசாரரணை செய்வதாகவும் தெரிய வந்துள்ளது.

தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்திலேயே தமிழர்கள் பலரைக் கைது செய்து வருகின்றனர். பொய்யாகத் தயாரிக்கப்பட்ட பல மொட்டைக் கடிதங்களை வைத்திருக்கும் படைப் புலனாய்வாளர்கள் அவற்றைக் காண்பித்தும் தமிழ் மக்களை மிரட்டி விசாரணை செய்து வருகின்றனர்.

சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் சென்று திரும்பிய தோல்விப் பயணத்தின் பின்னர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தமிழ் மக்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் மேலும் அதிகரித்துக் காணப்படுவதாக லங்கா கார்டியன் இணையம் மேலும் சுட்டிக்காட்யிருக்கின்றது.

0 Responses to கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழர் கைது அதிகரிப்பு: லங்கா கார்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com