தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் இந்திய புலனாய்வுத் துறையான றோ அங்கத்தவர்களின் ஊடுருவல் அதிகரித்திருப்பதாக, பாதுகாப்பு அமைச்சின் உள்ளகத் தகவலை ஆதாரம்காட்டி சிஙகள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
இந்தியாவின் பயிற்றுவிக்கப்பட்ட புலனாய்வு அங்கத்தவர்கள் மட்டுமன்றி, படை உறுப்பினர்களும் புலனாய்வு நடவடிக்கைக்காக இலங்கையில் பல்வேறு வகையில் களமிறக்கப்பட்டிருப்பதாக இந்தத் தகவல் மேலும் கூறுகின்றது.
இவ்வாறு களமிறக்கப்பட்டவர்களில் இருவர் கடந்த சில நாட்களிற்கு முன்னர் கண்டியிலும், நீர்கொழும்பிலும் சிறீலங்கா புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், உயரதிகாரிகளின் தலையீட்டின் பின்னர் அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கையில் சீன ஆதிக்கம் மிகவும் அதிகரித்துள்ள பின்னணியில் கலக்கம் அடைந்துள்ள இந்தியா, சிறீலங்கா அரசை தமது கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வழி வகைகள் பற்றி ஆராய்ந்து வருவதுடன், அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்துள்ளது.
முன்னர் விடுதலைப் புலிகளைச் சொல்லிச் சொல்லியே சிறீலங்கா அரசைக் கட்டுப்படுத்திவந்த இந்தியா, தற்போது வழியின்றி விழி பிதுங்கி நிற்கும் நிலையில், எந்த வகையிலாவது சீன ஆதிக்கத்தை ஒழிப்பது என முடிவு செய்துள்ளது. ஆனால் சிறீலங்கா அரசோ சீன அரசின் பக்கமே தனது விசுவாசத்தை அதிகம் காட்டி வருவதையும் இந்தியா உணரத் தவறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

0 Responses to இலங்கையில் இந்திய புலனாய்வாளர்களின் ஊடுருவல் அதிகரிப்பு