Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரிசு 17 தமிழ்ச்சோலையின் 15 வது ஆண்டினைச் சனிக்கிழமைமதியம் 1:30 மணிக்கு நினைவுச்சுடர் மூத்த ஆசிரியர்களாலும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியகப் பொறுப்பாளர் திரு. யெயக்குமார் மற்றும் ஏனைய சங்கத்தலைவர்கள், தமிழர் அமைப்புகளின்  பொறுப்பாளர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.

அகவணக்கம் செலுத்தப்பட்டு மாணவர்களால் தமிழ்ச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்பு உரையை தமிழ்ச்சங்க தலைவர் திரு. சுந்தாஅவர்கள் ஆற்றியதோடு வரவேற்பு நடனமும் வழங்கப்பட்டது.

ஆத்திசூடி, குருவிப்பாட்டு, கவிதை ( மீண்டும் எழுவோம் என்றதலைப்பில்) தாய்மொழி, கல்வி, பேச்சின் சிறப்பு என்கின்ற தலைப்பில் உரைகளும், நடனம் எழுச்சி நடனம், வில்லுப்பாட்டு, சமூக நாடகம், மிருதங்கம், வயலின் இசை, சுரத்தட்டு இசை, என்ற பல்வேறுமாணவர்களின் திறமைகள் வெளிக்காட்டப்பட்டிருந்தது.

நிகழ்வில் பாரிசு மாநகரசபையின் முதல்வர்சார்பில்  பிரதி நிதிகலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். தான் இன்று தான் தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், அவர்களின் பண்பாடுகளையும் பார்க்ககிடைத்திருப்பதாகவும் ஆனாலும் பலசிரமத்திற்க்கு மத்தியில் 110 மேற்பட்ட குழந்தைகள் தாய் மொழியை கற்றுவருவது ஒருசிறப்பான முக்கியமாகவே பார்க்கப்படுகின்றது என்றும் இனிவருங்காலங்களில் தம்முடைய ஒத்துழைப்பு இவர்களுக்கு கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

நினைவுமலரும் வெளியிடப்பட்டிருந்தது. அதனைத மிழ்ச்சோலை தலைமைப் பணியக பொறுப்பாளர் திரு. nஐயக்குமார் வெளியிட்டு வைக்க அதனை பிரான்சின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வின் மக்கள் தொடர்பாளரும், பரப்புரைப் பொறுப்பாளருமாகிய திரு. மேத்தா அவர்களும், தமிழ்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்களும் மற்றும் ஏனைய தமிழ்ச்சங்க தலைவர்கள் பிரதிநிதிகளும் பெற்றுக்கொண்டனர். தமிழ்ச்சோலை ஆசிரியர்களும், அதன் நிர்வாகி திரு. பாபு அவர்களும் மக்கள் முன்னிலையில்  பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர்.

மதிப்பளித்தலை தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவை இணைப்பாளர் திருமதி. அ. நகுலேசுவரி அவர்களும், முந்நாள் தலைமை ஆசிரியரும் தமிழர்ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினருமாகிய திரு. சத்தியதாசன் அவர்களும் மதிப்பளித்தலை செய்திருந்தனர். சிறப்புரையை பரப்புரைப் பொறுப்பாளர் நிகழ்தியிருந்தார். மாணவர்களின் நிகழ்வில் மிருதங்கம் வாசித்த சிறுவனின் இசையும்,எ திலிகள் என்கின்ற நாடகமும் மக்களின் மனங்களையும் தாயகத்தை நோக்கியும் 2009ல் நடை பெற்ற மறக்க முடியாத தமிழின அழிப்பை நோக்கி கொண்டு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் எனஎல்லோரும் கலந்துகொண்டு தமது உணர்களை வெளிப்படுத்தி அனைவரின் கண்களில் கண்ணீரை வரவழைத்திருந்தனர். அனைத்துமாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி மதிப்பளிப்பு செய்யப்பட்டது.

0 Responses to பாரிசு 17 தமிழ்ச்சோலையின் 15 வதுஆண்டு விழா (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com