Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்களை சுற்றி என்ன நடக்கிறது?

எம் தாய் மண்ணலில் தினமும் கொலையும் கொள்ளையும்!
எமது உறவுகளின் பாதுகாவலர்கள் நாங்கள்.

ஒரு கொலைகாரன் உலகத்தை வலம் வந்து தனது கொலையை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறான்.

நாம் இன்றும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கறோம்.

வன்னி மண்ணில் இருந்த எமது உறவுகள் 429059, வெளிவந்தவர்கள் 282380, மீதி 146679 எங்கே?

வாருங்கள் எல்லோருமாக கேட்போம்

அமெரிக்கா சென்றுள்ள சர்வதேச போர்க்குற்றவாழி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தராஜ பக்சவின் அமெரிக்க விஜயத்தைக் கண்டித்தும், மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக்கோரியும், தமிழர் தாயகப்பகுதியில் தற்போது இடம்பெற்றுவரும் கொலை, கொள்ளை , பாலியல் வன்கொடுமைகள், ஆள்கடத்தல்கள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துமாறு கோரியும் அமெரிக்க அரசிடம் நீதியை வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று பிரான்சில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அருகாமையில் வரும் சனிக்கிழமை பிற்பகல்3 மணிக்கு பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ளது.

இதில் கலந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துமாறு அனைத்து பிரான்சுவாழ் தமிழ் உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பயணத்தின்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவை மகிந்த சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மகிந்த சர்வதேச போர்க்குற்றத்தில் இருந்து தன்னைப் பாதுகாக்கும் தருணமாக இதனைப் பயன்படுத்தக் கூடும் என்ற நிலையில் நாம் எமது ஒருமித்த குரலை எழுப்புவதன் மூலமே மகிந்தவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்.

எனவே அனைவரும் தங்கள் பங்களிப்பை வழங்கவேண்டிய தருணம் இது என்பதையும் தெரிவிக்கும் கடமைப்பாட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்த போராட்டம் பிரான்சு நாட்டில் மே 27, 2009யில் இருந்து நாம் மறக்கமாட்டோம்என்று தொடர் கவனயீர்ப்பு போராட்டமாக நடைபெற்று வருகிறது.

ஜனவரி 22ம் திகதி மலை 3 மணிக்கு,

Eglise de la Madeline (Métro Madeline-Ligne 8 -12)

அமெரிக்கத் தூதுவராலயத்தின் அருகாமையில்

ஜனவரி 26ம் திகதி மலை 3 மணிக்கு Assemblée Nationale (Métro Assemblée Nationale -Ligne 12, Invalides Ligne 8-13, RER C) பிரான்சுபராளுமன்றத்து அருகாமையில்

பெப்ரவரி 4ம் திகதி மலை 2 மணிக்கு Place du Paraguay (Métro Porte Dauphine Ligne 2) சிறிலங்கா தூதுவராலயத்தின் அருகாமையில், சிறிலங்கா சுதந்திர நாளை புறக்கணிப்போம், தமிழிழ தாயகத்தை வலியுறுத்துவோம்.

பெப்ரவரி 9 ம் திகதி முதல் மலை 3 மணிக்கு Assemblée Nationale (Métro Assemblée Nationale -Ligne 12, Invalides Ligne 8-13, RER C) பிரான்சுபராளுமன்றத்து அருகாமையில் ஒவ்வொரு புதன்கிழமை மாலைநாம் மறக்கமாட்டோம்

பெப்ரவரி 26ம் திகதி மலை 3 மணிக்கு Place de la République (Métro République -Ligne 3-5-8-9-11) பிரான்சு நாட்டு 40க்கு மேற்பட்ட அரசு, அரசசார்பட்ட அமைப்புகளுடன் ஒன்றுசேர்ந்து மாபெரும் ஊர்வலம்.

பயங்கரவாதம் என்ற சொல் நிக்கப்படும் வரை, எமது மக்களின் விடுதலை, 1948யிலிருந்து பறிக்கப்பட்ட எமது நிலங்கள் எம்மிடம் ஒப்படைக்கும் வரை, எமது மூதாதையர் தொடக்கி எமது மாவீரர் செய்த போராட்டம் நாம் நீதி கிடைக்கும் வரை நிறுத்தோம்.

வாருங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்போம்

தமிழரின் தாகம் தமிழித் தாயகம்

பிரான்சு தமிழிழ மக்கள் பேரவை

தொடர்பு: 06 15 88 42 21

0 Responses to எங்களை சுற்றி என்ன நடக்கிறது? – வாருங்கள் எல்லோருமாக கேட்போம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com