Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படம் அடங்கிய கலண்டர் ஒன்றை திருகோணமலை பொலிஸார் திருமலை, உப்புவெளி பிரதேச கன்னியா வெந்நீர் ஊற்று காட்டுப் பகுதியிலிருந்து மீட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

திருமலை பொலிஸார் நேற்று மேற்கொண்ட சோதனையின் போதே தலைவர் அவர்களின் புகைப்படம் அடங்கிய கலண்டர் உட்பட ரீ 56 ரக தன்னியக்க துப்பாக்கி ஒன்று, கைக்குண்டொன்று, ரீ 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 116, மகஸின் உள்ளிட்டவையும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

திருமலை காட்டுப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் இருப்பதாக மக்கள் வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 Response to தென் தமிழீழம் திருமலை காட்டில் தலைவரது புகைப்படம் அடங்கிய கலண்டர், ஆயுதங்கள் மீட்பு

  1. புலிகளுக்கும் தலைமைக்கும் என்றைக்கும் அழிவென்பதே இல்லை..
    இதை உலகம் விரைவில் உணரும்..

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com