Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழவிடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நாயகர்களான கேணல் கிட்டு உட்டப பத்து வேங்கைகளின் 18ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் நடுவம் பிரான்சினால் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் பாரிசில் தமிழர் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள மையப்பகுதிக்கு அருகைமையுள்ள Salle Max Dormoy, 50 Rue Du Torcy . 75010 Paris எனும் இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3மணிக்கு இடம்பெறவுள்ளது.

மாவீரர்களுக்கான இசையாஞ்சலியுடன் ஆரம்பமாகும் இவ்வணக்க நிகழ்வில் சமாகால சமூக-அரசியல் பதிவு செய்யும் "செந்நீர் விட்டு வளர்த்தோம்...." எனும் கையேடும் வெளியிடப்படவுள்ளது.

சிறப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரான்சுக்குரிய முதலாவது தேசிய அட்டை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

0 Responses to பிரான்சில் கேணல் கிட்டு உட்பட வீரகாவியமாகிய பத்து மாவீரர்களின் நினைவேந்தல் நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com