இந்தியாவின் கேரள மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சிறிலங்காவைச் சேர்ந்த இருவர் உயிரிழந்திருப்பதாக இந்திய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அசோக், பத்மநாதன் ஆகிய இருவரும் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குமுளி காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலையில் மகரஜோதியை தரிசித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் மலைப்பாதையில் வாகன விபத்து ஒன்றை அடுத்து ஏற்பட்ட நெரிசலில் சிக்கினர்.
நேற்றிரவு 8 மணியளவில் புல்லுமேடு என்ற இடத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 107 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதில் சிறிலங்காவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரது பெயர் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேரும் இந்த விபத்தில் மரணமாகியுள்ளனர்.
இன்னும் பலரினது சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சபரிமலை யாத்திரை நெரிசலில் சிறிலங்காவைச் சேர்ந்த இருவர் பலி (படங்கள் இணைப்பு)