இலங்கையில் 'தமிழீழம்' என்ற நாமத்தை உச்சரித்த காலங்கள் தொடக்கி இன்றுவரை நடந்தேறிவரும் இனப்படுகொலைகளையும், காணாமல் போதல்களையும் எண்ணிக்கையில் அடக்கமுடியாது. நியாயம் பேசுகின்ற, சமாதானக் கோபுரங்கள் என தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் உலகின் பல நாடுகள்,
இலங்கையின் தமிழின அழிப்பைப்பற்றி மெளனமாகவே இருக்கிறது. இதற்கும் மேலாக தமிழர் அமைப்புகளும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பதவிகளில் மாத்திரம் தம்மைப் பிரதிநிதிப்படுத்தியதோடு தம் கடமைக்கு அரை மாத்திரையிட்டு மந்த வேகத்தில் அல்லது வாயடைத்து நிற்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இலங்கையில் வாழும் சிங்கள மக்களில் மனிதாபிமானத்தோடும், மனித நேயத்தோடும் ஈழத்தமிழரின் படுகொலைகளையும், அனர்த்தங்களையும் காண்பவர்கள் உள்ளார்கள் என்பதை அறிதல் வேண்டும். ஒட்டுமொத்தமாக முழு சிங்கள இனமும் தமிழருக்கெதிரான அரசின் பாதகத்திற்கு சார்பாக நிற்கின்றார்கள் என்ற முடிவுக்கு தமிழர்கள் வந்துவிடக் கூடாது.
அவுஸ்திரேலியாவில் வாழும் மனித உரிமை செயற்பாட்டாளர் கலாநிதி பிரையன் செனிவிரட்ன, செஞ்சிலுவைச் சங்க ஆரியரட்ன, தமிழரின் இன்றைய நிலைபற்றி இந்தியத் தமிழ்நாட்டில் நூல் வெளியிட்ட நிமல்கா பெர்னாண்டோ, சமாதான சக வாழ்வை வலியுறுத்தும் குமார் ரூபசிங்க, சம அந்தஸ்து உடைய பிரஜைகளாக தமிழர்கள் வாழவேண்டுமென கூறும் விக்கிரமபாகு கருணாரத்ன போன்ற பலரை மீட்டிப் பார்த்தல் அவசியம். இருப்பினும் இவர்களின் குரல்கள் எப்படித்தான் ஓங்கி ஒலித்தாலும் கடலில் கரைத்த உப்பாக சிங்களப் பேரினவாதத்துக்குள் மறைந்து போகின்றது.
மெளனங்களும், மந்த கதிகளும், பாராமுகங்களும் தமிழின அழிப்பை அதிகரிக்கவே செய்யும். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கான பொறிமுறையை உடனடியாக கண்டறிய வேண்டியது தமிழரின் கடமையாகும். அதற்கமைவாக சில நிபந்தனைகள் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இதனைத் தளமாகக் கொண்டோ அல்லது மாற்றியமைத்தோ செயற்திறன் மிக்கதான ஒரு 'பொறி' முறையை ஆக்கவேண்டிய பொறுப்பு புத்திஜீவிகளிடம் விடப்படுகிறது.
இலங்கையில் தமிழின அழிப்பை நிறுத்துவதற்கு சர்வதேசத்தினூடாக இலங்கை அரசைக் கோரும் நிபந்தனைகள்:-
* இலங்கையில் தமிழர் என்ற காரணத்தினால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டால் அவரது அடுத்த வாரிசுக்கு ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா நஷ்ட ஈட்டுப் பணமாக இலங்கை அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கல்விகற்கும் பிள்ளைகளுக்கு தலா இருபத்து ஐந்து இலட்சம் ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்கை முடியும்வரை செலவீனங்கள் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் தொழில் வாய்ப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
* இதன் நிர்வாகங்கள் அனைத்தும் அவ்வவ் கிராமசேவை உத்தியோகத்தர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஊடாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகள் ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுமிடத்து, அவர்களுக்கான சலுகையாக வெட்டுப்புள்ளியிலிருந்து இருபத்தி மூன்று சதவிகிதம் குறைக்கப்பட்டு சித்தி வழங்கப்படல் வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் பிள்ளைகளின் பல்கலைக்கழகத் தெரிவின்போது வெட்டுப்புள்ளியிலிருந்து முப்பத்தியிரண்டு சதவிகிதம் குறைக்கப்பட்டு உள்வாங்கப்பட வேண்டும்.
* கொல்லப்பட்டவரின் கணவன் அல்லது மனைவிக்கு ஆயுட்காலம் வரை அரச போக்குவரத்து சாதனங்கள் யாவும் இலவசமாக்கப்படல் வேண்டும். பிள்ளைகளிற்கு இருபத்தி ஐந்து வயது வரை அரச போக்குவரத்து சாதனங்கள் யாவும் முழுமையாக இலவசமாக்கப்படல் வேண்டும்.(புகையிரதப் பயணத்திற்கு முதலாம் வகுப்பு பயணச்சீட்டு வழங்கப்படல் வேண்டும்)
* கொல்லப்பட்டவரின் பெண்பிள்ளைக்கு அவரின் வதிவிட சூழலுக்குள் (முடிக்குரிய காணி) ஐந்து ஏக்கர் குடியிருப்பு அடங்கிய (விவசாய) நிலம் அரசால் வழங்கப்படவேண்டும்.
* கொல்லப்பட்டவரின் சார்பாக பதினாறு புலம்பெயர்வாழ் பிள்ளைகளுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை வழங்கப்படவேண்டும்.
* குறிக்கோள் மாறாமல் மேற்குறித்த நிபந்தனைகளை மேலும் செயற்திறன் மிக்கதாக செழுமைப்படுத்த எவருக்கும் உரிமையுண்டு.
கனக கடாட்சம்
trincokadatcham@yahoo.com

0 Responses to "தமிழீழம்" என்ற நாமத்தை உச்சரித்த காலங்கள்