ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டபோது மத்திய அரசு சுண்டு விரலைக் கூட அசைக்காதது ஏன்?- ஜெ. கேள்வி
ஈழத்தில் தமிழர்கள் கும்பல் கும்பலாக கொன்று குவிக்கப்பட்டபோது அதைத் தடுக்க மத்திய அரசு முயலாதது ஏன். சுண்டு விரலைக் கூட அசைக்க முன்வராதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் தனக்குள்ள உறவு குறித்து ஜனவரி மாதம் 15ந் தேதியன்று நடைபெற்ற ஒரு விழாவில் விரிவாக விளக்கி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி . எப்பொழுததெல்லாம் நான் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுகோள் வைக்கிறேனோ, அப்பொழுதெல்லாம் அதை ஏற்றுக் கொள்ள முதலில் தயக்கம் காட்டும் காங்கிரஸ் பின்னர் அதனை ஏற்றுக் கொண்டு விடும் என்று கூறி இருக்கிறார்.
காவிரி, பாலாறு, பொண்ணையாறு ஆகிய நதிநீர்ப் பிரச்சினைகளில் தமிழ்நாட்டிற்குள்ள நியாயமான பங்கு ஏன் கிடைக்கவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு அரசால் ஏன் செயல்படுத்த முடியவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது.
அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை கடற்படையை தடுத்து நிறுத்த ஏன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறிப்பாக காய்கறிகள், உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றின் விலைகளை குறைக்க ஏன் எதையும் செய்யவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதை தடுத்து நிறுத்த மத்திய அரசு ஏன் தனது சுண்டு விரலை கூட அசைக்கவில்லை என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. இதற்கு காரணம், இந்தக் கோரிக்கைகைளை எல்லாம் கருணாநிதி மத்திய அரசிடம் முன் வைக்கவில்லை.
கருணாநிதியே குறிப்பிட்டது போல் இந்தக் கோரிக்கைகளை எல்லாம் கருணாநிதி வைத்திருந்தால், காங்கிரஸ் முதலில் தயக்கம் காட்டியிருந்தாலும், பின்னர் அதனை ஏற்றுக் கொண்டு இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இத்தனை நாட்களாக காங்கிரஸையும், மத்திய அரசையும் சாடாமல் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தார் ஜெயலலிதா. இதற்காக ஈழத் தமிழர் பிரச்சினையைக் கூட அவர் ஓரம் கட்டி விட்டார். ஆனால் தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வர வாய்ப்பில்லை என்பது உறுதியானதும் மீண்டும் காங்கிரஸையும், மத்திய அரசையும் சாட ஆரம்பித்துள்ளார். மீண்டும் ஈழத் தமிழர் பிரச்சினையையும் கையில் எடுத்துள்ளார்.
அதை விட முக்கியமாக ஆரம்பத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தற்போது ஜெயலலிதாவை நான் ஆதரிப்பதாக கூறவில்லை என்று கூறி விட்டார். இதையடுத்து சீமான் கை நழுவிப் போய் விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

0 Responses to பல்லாயிரம் வீடுகள் அழிய பார்த்திருந்துவிட்டு பத்தாயிரம் வீடுகட்டுவதாகக் கூறும் இந்தியா?