புதிய தலைமுறை சென்னை சூப்பர் சிக்சஸ் என்ற பெயரில் நடக்கும் கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக இலங்கையின் கிரிக்கெட் வீரரும் அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை இனவெறி அதிபர் ராஜ பக்சேவின் தீவிர ஆதரவாளருமான சனத் ஜெயசூர்யா அவர்கள் கலந்து கொள்ள இருந்ததை அடுத்து நாம் தமிழர் கட்சி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது, நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் இப்போட்டி ஏற்பாட்டாளர்களான புதிய தலைமுறை கட்சி அலுவலகத்திருக்கு நேரில் சென்று ஜெயசூர்யா அவர்கள் பங்கேற்பதை ரத்து செய்யவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து மனு அளித்தனர்.
இதனையடுத்து இன்று நிகழ்ச்சி நடக்கவிருந்த மாயாஜால் அரங்கத்திற்கு எதிரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் அதிகமானோர் மாயாஜால் அரங்கின் நுழைவு வாயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்ப இடத்துக்கு வந்த மாநகர காவல் துறை இணை ஆணையாளர் சாரங்கன் அவர்கள் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜெயசூர்யா அவர்கள் அழைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். இதில் சமாதனமடையாத நாம் தமிழர் கட்சியினர் நம் சொந்த உறவுகளை லட்சக்கணக்கில் கொன்ற கொலைகாரன் ராஜபக்சே அரசின் நாடாளுமன்ற உறுப்பினரை புதிய தலைமுறை குழுமத்தினர் சிறப்பு அழைப்பாளராக அழைத்து தாய் தமிழகத்தில் வாழும் தமிழர்களை மட்டுமல்லாமல் உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்தியுள்ளதாக தெரிவித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி ஆர்பாட்டத்தை கைவிட மறுத்தனர்.
இதனையடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாம் தமிழர் கட்சியினர் முன்னிலையில் தங்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு ஜெயசூர்யா அவர்கள் வருவது குறித்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் முடிவு செய்யப்பட்டது என்றும்,நாம் தமிழர் கட்சியினர் கேட்டுகொண்டதர்க்கு இணங்க மற்றும் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜெயசூர்யா அவர்கள் இந்த கலந்துகொள்ளவதை ரத்து செய்துவிட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும்நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தையடுத்து மாயாஜால் அரங்கின் நுழைவாயிலில் இலங்கையை சேர்ந்த கிரிகெட் வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு பதாகை ஒன்று வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சென்னை சூப்பர் சிக்சஸ் போட்டியில் ஜெயசூர்யா கலந்து கொள்ளவது ரத்து செயப்பட்டது