Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் மத்திய அரசிற்கும் தமிழ்நாட்டு மாநில அரசுக்கும் அழுத்தத்தை கொடுக்கும் விதத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 500 மீனவர்கள் சிறிலங்கா அரசிடம் அரசியல் தஞ்சம் கோரப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதுவரைகாலமும் சிறிலங்கா கடற்படைகளால் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் அதுபற்றி உரிய அக்கறைகாட்டாது செயற்பட்டுவந்துள்ளன என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னரும் ஜெயகுமார் என்கின்ற மீனவரும் கொல்லப்பட்டிருந்தார்.

வழமைபோல மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கருணாநிதி அரசு அறிவித்ததை தொடர்ந்து கொதிப்படைந்த நாகப்பட்டினம் வாழ் மீனவர்கள் இம்முடிவை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தைச்சேர்ந்த புஸ்பவனம் கிராம தலைவர் எம் கதிர்வேல் இதுபற்றி தெரிவித்ததாவது:

உலகதரம் வாய்ந்த கடற்படையையும் கடலோர கண்காணிப்பு படையையும் வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசுகள் எமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தவறிவிட்டன. இதன் காரணமாக சிறிலங்கா அரசிடமே அடைக்கலம் தேடுவதற்கு முடிவெடுத்துள்ளோம்.

இன்னும் ஒருவாரத்தில் 100 படகுகளில் சிறிலங்காவின் எல்லைகளை நோக்கி சென்று அகதி தஞ்சம் கோரவுள்ளோம். இதன் மூலமாவது மாநில மற்றும் மத்திய அரசுகளின் அக்கறையற்ற தன்மையை வெளிக்கொண்டுவரமுடியும்.

அங்கு அகதி தஞ்சம் அடைந்து அந்நாட்டின் கடற்கரைகளில் வாழ்ந்தாவது தொழில்செய்து உயிர்வாழ முடியும் என நம்புகின்றோம்.

என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் இந்நடவடிக்கையானது இந்தியாவின் மீது கடுமையான அழுத்தங்களை கொண்டுவரும் எனவும் அதன் மூலம் மீனவர்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்படுவது சாத்தியப்படும் எனவும் அனைத்திந்திய பாரம்பரிய மீன்பிடித்தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மகேஸ் தெரிவித்துள்ளார்.

ஈழநேசன்

0 Responses to 500 தமிழ்நாட்டு மீனவர்கள் சிறிலங்காவில் அகதி தஞ்சம் கோரமுடிவு! இந்தியாவின் இறையாண்மை?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com