இலங்கைசென்று அங்கு தமிழர்கள் வாழும் பகுதிகளை பார்வையிட்டு திரும்பும்போது இலங்கைப் பாதுகாப்பு படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக வழக்கறிஞர் அங்கயற்கண்ணி மற்றும் நாம் தமிழர் இயக்க பிரமுகரான திருமலை ஆகியோர் கடந்த வெள்ளியன்று விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளனர். என பிபிஸி செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இவர்களின் தடுத்துவைக்கப்பட்டமைக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. இலங்கை அரசு அவர்களை விடுவிக்கவேண்டும் என்று தமிழகத்தில் வழக்கறிஞர் சங்கங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆராய்ந்து, பின்னர் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உதவிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காக தாம் இலங்கை சென்றதாக தமிழோசையிடம் பேசிய வழக்கறிஞர் அங்கயற்கண்ணி கூறினார்.
சுற்றுலாப் பயணி என்று கூறி இலங்கைக்குச் செல்ல தாம் நுழைவு அனுமதி பெற்றதாகவும், தமிழர்கள் வாழும் வட கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல பாதுகாப்புத்துறையின் அனுமதியைக் கொழும்பில் தாம் பெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற கிழக்குப் பகுதிகளையும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய வன்னிப் பிரதேசங்களையும் பார்வையிட்டுவிட்டு, கடைசியாக வடக்கே யாழ்ப்பாணமும் சென்றதாக அவர் தெரிவித்தார். அப்பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்கள் நிலையை அவதானித்ததாகவும், மக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்ததாகவும் அவர் கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளை யாழ்ப்பாணத்தில் தாம் சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இலங்கை பாதுகாப்புப் படையினர் தம்மைக் கைதுசெய்து முதலில் மாங்குளத்திலும், பின்னர் கொழும்பில் இராணுவ விசாரணை மையத்திலும் சந்தேகத்தின் பேரில் தம்மைத் தடுத்து வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார்.
தாம் எடுத்திருந்த புகைப்படங்கள் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும் அங்கயற்கண்ணி கூறினார்.
தாங்கள் அரசியல் நோக்கத்திற்காக இலங்கை செல்லவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.

0 Responses to கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் விடுதலை