Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான நிபுணர்குழுவுக்கு நான்காயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் அரச படைகளுக்கு எதிரான குறித்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை புலம்பெயர்ந்து வாழும் மக்களாலேயே முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தற்போதைக்கு நிபுணர் குழுவானது தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ஆயினும் அனைத்து விசாரணைகளின் முடிவிலும் தயாரிக்கப்படும் கடைசி அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பதாக நிபுணர் குழுவானது அதனை இலங்கை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து, அவ்வறிக்கை தொடர்பான அரசாங்கத்தின் கருத்தை விசாரிக்கும் என்றும் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிகின்றன.

அவ்வாறான இறுதி அறிக்கை வெளியாகும் பட்சத்தில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை எதிர்வுகூறமுடியாதவொரு நிலையே காணப்படுவதாக அவதானிகள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

0 Responses to ஐ.நா. நிபுணர் குழுவுக்கு புலம்பெயர் மக்களே பெரும்பாலான முறைப்பாடுகளைச் அனுப்பியுள்ளனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com