Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகம், செங்கல்பட்டு நகரில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் தங்கியுள்ள ஈழத் தமிழர்கள் 22 பேர் நேற்று காலை முதல் உணவு புறக்கணிப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர் .

இவர்கள் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள்.சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு எந்த வித வழக்கு விசாரணையும் இன்றி ஒரு வருடமாக தமிழக காவல்துறையால் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு நாளொன்றுக்கு 45 ரூபாய் வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை ரூபாய் 675 தமிழக அரசால் கொடுக்கப்படுகிறது.இது ஒரு வாரம் செலவுகளுக்கு மட்டுமே இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. மற்ற ஏழு நாட்களும் இவர்களை பார்க்க வரும் மக்களிடையே கையேந்தும் நிலையிலேயே உள்ளனர்.

இலங்கையில்இருந்தால் எங்களை போன்ற ஆண்களை கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தில் எங்கள் வீட்டில் இருப்பவர்கள் தங்களது நகைகளை எல்லாம் விற்று கடும் சிரமத்திற்கிடையே இங்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் எங்களது தாய் தமிழ்நாடு எங்களை கைது செய்து இங்கு வைத்துள்ளது.எங்கள் மீது எந்த வழக்கும் பதியாத நிலையில் சந்தேகத்தின் பேரில் நாங்கள் ஏன் ஒரு வருடமாக இங்கிருக்க வேண்டும். எங்களை விடுதலை செய்யாதவரை எங்களின் இந்த உணவு புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்று உறுதி பட கூறுகின்றனர்.





0 Responses to செங்கல்பட்டு முகாம் மக்களை விடுதலை செய்யக் கோரி ஈழத்தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com