Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தீவு பிறர் ஆதிக்கத்தில் இருந்து 1948ல் தனது தனது உரிமையைப் பெற்றுக்கொண்ட நாள் என்பது தமிழர்கள் தமது உரிமைகளைத் தேட ஆரம்பித்த நாளாக தமிழர் வரலாற்றில் பதிவாகி உள்ளது.

தமிழர்கள் தம் உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து கடந்த 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் நடாத்திய போராட்டங்களை சிங்கள பேரினவாதம் சர்வதேச சக்திகளின் துணைகொண்டு ஒடுக்கியது.

1917 ஆம் ஆண்டு முதல் தமிழ் இன மக்களை அழித்து வந்த சிங்கள அரசுகள், எம் நிலம், மொழி, கலாச்சாரம், பிரான்சு அரசு 1789 ஆம் ஆண்டு எழுதிய மனித உரிமை சாசனத்தின் படியும், 1948 ஆம் 2 ஆம் உலக போரிற்கு பின் Holocaustes என்று சொல்லப்படும் யூத இன மக்களின் அழிப்பிற்கு பின் « இனிமேல் இது வேண்டாம் » என்று கூறி மீண்டும் எழுதப்பட்ட மனித உரிமை சாசனத்தின் படியும் ஒரு இனத்தின் ஜனநாயக உரிமை போராட்டம், சிறிலங்கா அரசின் இராஜதந்திர நகர்வுகளாலும், உலக நாடுகள் தமது சொந்த புவியியல் நலனுக்காகவும் தம் நாட்டு பொருளாதார விருத்திக்காகவும் எமது விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் என்ற சொல்லுக்குள் கொண்டு சென்று அடக்கி தமிழ் மக்களை பாரிய இழப்புகளுக்குள் உள்ளாகி, இன்று எம் மண்ணில் எம் மக்களை « உரிமை » என்ற சொல்லைப் பாவிக்க முடியாத இனமாக மாற்றி வைத்திருக்கிறது.

அதனால் இன்று எம்மினம் தனது உறவுகளையும் வாழ்விடங்களையும் அடையாளங்களையும் இழந்து அகதிகளாக்கப்பட்டு சொல்லொணா வேதனைகளுக்குள் சிக்கித் தடைமுகாம்களுக்குள்ளும் திறந்த வெளிச் சிறைச்சாலைகளுக்குள்ளும் வாழ்கின்றது.1917 முதல் ஆரம்பமான தமிழ் இன அழிப்பு 2009 ல் உச்சக் கட்டத்தை
அடைந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருகிறது.

போர்க்குற்ற நாடக, மனித நேயத்திற்கு எதிரான அரசியலை நடைமுறைப்படுத்தும் நாடாக சிறிலங்காவை பல அரசுகளும் அரச சார்பற்ற மனித நேய அமைப்புகளும் கூறி வருகின்றன.

ஐக்கிய நாட்டு சபையின் சாசனத்தை மதிக்காமல், தாம் செய்த அத்தனை படுகொலைகளையும் நியாயப்படுத்தி வரும் சிறிலங்கா அரசு உலக அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கப்படவேண்டியவர்கள். இன்று பல நாடுகள் இந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள், அதை தடுத்து நிறுத்த சிறிலங்கா தம்மை சுற்றி ஒரு நட்பு வட்டத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.

எமது மக்களின் சுதந்திர வாழ்வை வேண்டி அரசியல் ரீதியில் போராடி அதனை சர்வதேசத்தின் அனுசரணையுடன் பெற்றுக் கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தமிழ்மக்களின் கையில் தான் தங்கியுள்ளது.

எம் மக்களுக்காக தமிழர்களிடம் இருந்து சிங்களப் பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட உரிமையை மீண்டும் அவர்களின் சொந்த நிலத்தில் பெற்றுத் தந்து அவர்களின் எதிர்கால வாழ்விற்கு வழிவகுப்பதோடு சிறீலங்கா அரசால் 1948 ல் இருந்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை வழங்கி சிறீலங்கா அரசை அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் என்றும் போர்க்கைதிகள் என்று கூறித் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போராளிகளை அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் விடுவிக்க வேண்டுமெனவும் பிரான்சு நாட்டு அரசுடனும் ஐரோப்பிய ஒன்றியத்திடமும் கோரி சிறிலங்கா அரசை புறக்கணிக்கும் போராட்டம் பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையாலும், அனைத்து தமிழ் மக்கள் கட்டமைப்புகளாலும், பெப்ரவரி 4 ஆம் திகதி மாலை இரண்டு மணி முதல் சிறிலங்கா துதரகதிற்கு அருகாமையிலும், பெல்ஜியம் தமிழர் பண்பாட்டு கழகத்தால் பெப்ரவரி 3 திகதி மாலை இரண்டு மணி முதல் பெல்ஜியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பும் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலை நடத்தப்படுகிறது.

தென் சூடான் மக்களின் உரிமை போராட்டத்தில் எவ்வாறு ஒரு நோர்வே சமாதான தூதராக இருந்து ௨௦௦5யில் ஒரு இடைக்கால ஆட்சி உரிமையை வழங்கும் சமாதான உடன்படிக்கையை உருவாக்கியதோ அதே போல் தமிழ் மக்களின் சார்பாக சமாதான பேச்சுவார்த்தையில் ௨௦௦3 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் சமாதான உடன்படிக்கையில் ஒரு இடைக்கால ஆட்சி திட்டத்தை முன் வைத்தது, அதற்கு இந்திய, அமெரிக்க போன்ற தமது புவியியல், பொருளாதார நலன் நாடுகள் தடையாக இருந்தன.

உலக அரசியலில் மனித நலனுக்கு முன்னுரிமை வழங்காமையே இன்று பல நாடுகளில் மக்கள் தமது உரிமைக்காக போராட்டம் நடாத்த காரணமாகிறது. அதை நாம் எல்லோரும் வட ஆபிரிக்காவில் துனிஸ், எகிப்து, அல்ஜீரியா போன்ற நாடுகள் தமது உரிமைகளை பாதுகாக்க வெகுஜன போராட்டங்களை நடாத்துவதையும், காஷ்மீர், பாலஸ்தீன மக்கள் நடாத்தும் வெகுஜன போராடங்களூடாகவும் பார்க்கலாம்.

துனிஸ், எகிப்து போன்ற நாட்டு தலைவர்களை பாதுகாத்து வந்த பல உலக காலனித்துவ நாடுகளும், அமெரிக்க போன்ற நாடுகளும் மக்களின் ஜனநாயக போராட்டத்தின் முன்னால் தம் நட்பு நாட்டு தலைவர்களை பாதுகாக்க முடியாது இருப்பதையும் நாம் காணலாம். நாம் இன்று எமது போராட்ட முறைகள் ஜனநாயக போராட்டமாக மாறிய நிலையில் நாம் மக்கள் எல்லோருமாக சேர்த்து உலகத்திடம் நீதி கேட்போம். மக்கள் அணியாக திரள்வோம்.

நாம் இங்கு செய்யும் போராட்டங்கள் எம் மண்ணில் வாழும் மக்களுக்கு மனவுறுதியை கொடுக்கும். பெப்ரவரி 4 ஆம் திகதி மாலை 2 மணி முதல் நாம் எல்லோரும் சிறிலங்கா தூதரகத்திற்கு அருகாமையில் Place du Paraguay, Metro Porte Dauphine ( Ligne 2 ) யில் ஒன்றிணைவோம்.தமிழர் தமது உரிமைகளுடன் பாதுகாப்பாக வாழ அவர்களின் ஆட்சியுரிமை மீண்டும் அவர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். தமிழீழத்திற்கான பாதையை அமைப்போம்! நாளை தமிழ் ஈழத்தில் சந்திப்பதற்கு இன்று நாம் மக்கள் மாபெரும் அணியாக திரள்வோம்!.

தியாகசுடர்கள் முத்துக்குமார் , முருகதாசன் மற்றும் 19 தமிழ் மக்களின் உரிமைக்காய் விடுதலைத் தீயாக மாறிய வீர மறவர்களையும் நினைவு கூருவோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை
தொடர்பு : 06 15 88 42 21

0 Responses to பெப்ரவரி 4 சுதந்திர தினத்தை சிறிலங்காவை புறக்கணிக்கும் நாளாக மாற்றுவோம!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com