அத்துடன் எமது விடுதலையையும் உரிமையையும் வென்றெடுக்கவும் எமது அரசியல் பலத்தை உறுதி செய்யவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
நேற்று மாலை (12.03.2011) நடைபெற்ற அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திரு.பா.அரியநேத்திரன் அவர்கள் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
எதிர்வரும் 17 ம் திகதி நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலானது வெறுமனே ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலாகவோ அல்லது திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலாகவோ அமையப் போவதில்லை.
மாறாக இந்த தேர்தல் தமிழ் மக்களை பரீட்சிப்பதற்கு அல்லது அவர்களின் நாடியைப் பரிசோதனை செய்வதற்கான ஒரு அளவுகோலாகவும் தமிழர்கள் தற்போதும் தங்களின் உரிமையை நிலைநாட்ட முற்படுகிறார்களா? அவர்களுக்கென ஒரு தீர்வு அவசியமானதா? என சர்வதேசம் கணக்கிடவும் இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைக்கு வலுச்சேர்க்கவும் நடாத்தப்படுகின்ற ஒரு தேர்தலாகவேதான் அமையப்போகின்றது.
இதை வாக்காளப் பெருமக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் எமது விடுதலையையும் உரிமையையும் வென்றெடுக்கவும் எமது அரசியல் பலத்தை உறுதிசெய்யவும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்த கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்களான பிரசன்னா இந்திரகுமார் மற்றும் தமிழ்நேசன் அத்துடன் அந்த பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழர் உரிமையை வென்றெடுக்க கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள்: அரியநேத்திரன்