யேர்மனி பிரேமன் நகரில் கடந்த 4.11.2011 வெள்ளிக்கிழமை அன்று யேர்மன் பாராளமன்றத்தின் உறுப்பினர் திருமதி Agnes Alpers அவர்களுடன் அவரது காரியாலய பொறுப்பாளர் Dr .Rudolf Kossolapow அத்துடன் குர்டிஸ்தான் நாட்டை சேர்ந்த நபருடனும் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுடனும்....
.....அத்தோடு மனித உரிமை அமைப்பை சார்ந்தவர்களோடும் , இரு ஊடகவியலாளர்களோடும் இவர்களுடன் யேர்மன் ஈழத் தமிழர் மக்கள் அவை சார்பாக பிரதிநிதியும் கலந்து கொண்ட ஓர் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தை பற்றிய காணொளி ஜேர்மன் மொழியில் காண்பிக்கப்பட்டு அத்துடன் ஸ்ரீலங்காவின் பூகோள அரசியல் முக்கியத்தையும் எடுத்துச்சொல்லப்பட்டது.
அத்துடன் சமாதான காலத்தில் யேர்மன் அரசாங்கம் தமிழர்களின் நிலையை விளங்கி நடுநிலையாக நீதியாக செயற்பட்ட போதும் தற்போது அதாவது கடந்த சில வருடங்களாக அவர்களின் நிலை முற்றிலும் மாறி தமிழர்களுக்கு எதிர்ப்பாக செயல்படும் முகமாக குற்றம் செய்த அல்லது இனப்படுகொலை செய்த Major Jegath Dias யேர்மனியில் துணைத்தூதுவராக ஏற்று கொண்டு அத்துடன் தமிழ் மக்களுக்கு சேவை செய்த பணியாளர்களை பயங்கரவாதிகளாக குற்றம் சுமத்தி சட்ட நடவெடிக்கை எடுப்பது மிக அநீதியான நடவெடிக்கை என்பதும் கூறப்பட்டது.
இச் சந்திப்பில் கலந்து கொண்ட திருமதி Alpers எங்களுடைய கவலைகளும் ஆதங்கமும் தமக்கு புரிவதாகவும் தான் நிச்சயமாக தமிழர்களுக்கு யேர்மனியில் எப்பொழுதும் ஆதரவு தருவதாகவும் அத்துடன் நாம் முன் வைத்த கருத்துகளை தான் உள்வாங்கி ஆய்வு செய்து யேர்மன் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதாகவும் உறுதி தெரிவித்தார்.

0 Responses to ஈழத் தமிழர்களின் அவலநிலை குறித்து யேர்மன் பாராளுமன்ற உறுப்பினருடனான சந்திப்பு