Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், திமுககாங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் நீடித்து வந்த தொகுதிப் பங்கீடு சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், இதை செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

இதற்கிடையே அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஒரு வைபவத்தில் உரையாற்றிய திமுக தலைவர் முதல் கருணாநிதி அவர்கள் இந்தக் கூட்டணி உடன்பாடு குறித்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

திமுக காங்கிரஸ்சுக்கு 61 தொகுதிகளைத் தரும் என்றும், பாமக ஒரு தொகுதியையும், முஸ்லிம் லீக் ஒரு தொகுதியையும் காங்கிரஸுக்கு விட்டுத்தருவார்கள் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டு, பிறகு 63 தொகுதிகள் கேட்பது நியாயமில்லை என்று கூறிய திமுக, கூட்டணியில் நீடிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்பதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என்று கூறி, மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக தீர்மானம் நிறைவேற்றியது.

அதைத் தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

பிபிசி

0 Responses to திமுக காங்கிரஸ் மீண்டும் இணைந்தது! ராமதாஸ் தனது தொகுதியை விட்டுக்கொடுத்தார்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com