யாழ்ப்பாணம், மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த இராணுவக் காவலரண் சிவராத்திரி தினமாகிய நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
தென்னை ஓலை மற்றும் தடிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டிருந்த இக் காவலரண் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இக் காவலரணில் தற்போது இராணுவத்தினர் தங்கியிருப்பதில்லை. இந் நிலையிலேயே காவலரண் எரியூட்டப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடாநாட்டின் பிரதான வீதிகளில் படையினர் புதிய காவலரண்களை அமைத்தனர். அக் காலப்பகுதியிலேயே மூளாய் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவும் மேற்படிக் காவலரண் அமைக்கப்பட்டது. காவலரண் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினர் இரவு பகலாக இங்கு கடமையில் ஈடுபட்டனர்.
இந் நிலையில் மூளாய் அரசடியில் முகாமிட்டிருந்த கடற்படையினர் அண்மையில் அங்கிருந்து விலகிச் சென்றதைத் தொடர்ந்து மேற்படிக் காவலரணில் தங்கியிருந்த இராணுவத்தினர் மூளாய் அரசடிக்குச் சென்று அங்கு காவலரண் அமைத்துத் தங்கியுள்ளனர்.
மூளாய்ப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலுள்ள காவலரணில் கடந்த சில வாரங்களாக இராணுவத்தினர் கடமையில் ஈடுபடாமையை அவதானித்த சிலரே மேற்படிக் காவலரணைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
நேற்றுக் காலை இப் பகுதிக்கு வருகை தந்த இராணுவத்தினர் எரியூட்டப்பட்ட காவலரணைப் பார்வையிட்டுச் சென்றதாகப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to இனந்தெரியாத நபர்களால் மூளாய் இராணுவக் காவலரண் தீக்கிரை